ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் இவர்தான்.. உண்மையிலேயே கர்ணனாக வாழ்ந்த நடிகர்

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் வள்ளல் என்றாலே அது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தான். இவர் மறைந்து பல வருடங்கள் ஆன பின்னும் இன்று வரை இவர் அளித்த கொடைகளைப் பற்றி தமிழ் சினிமா உலகம் பேசி வருகிறது. ஒரு நடிகராகவும், முதலமைச்சராகவும் எம் .ஜி. ராமச்சந்திரன் அவர்கள் மக்களுக்கு போதும் போதும் என்று உதவிகளை செய்திருக்கிறார்.

இவர் செய்த பல உதவிகள் திரை பிரபலங்களால் அதிகமாக பேசப்பட்டது. மேலும் அவருடைய படங்களிலும் இவரை காட்சிகளிலும், பாடல்களிலும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். இதனால் மற்ற நடிகர்கள் செய்த உதவி கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே காணாமல் போய்விட்டது. இதே போன்று தான் நடிகர் செய்த உதவிகளும் பெரிதாக பேசப்படாமல் போய்விட்டது.

Also Read:இறக்கும் வரை எம்ஜிஆர் கூடவே இருந்த 5 பாடிகார்ட்ஸ்.. கடைசி வரை கட்டிக் காப்பாற்றிய ரகசிய புகைப்படம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் அந்த நடிகர். சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக மிகப்பெரிய போட்டிகள் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் நட்பு பாராட்டி வந்தனர். ஆனால் இப்போது அஜித் மற்றும் விஜய், ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் எப்படி அடித்துக் கொள்கிறார்களோ, அதேபோன்றுதான் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

எல்லாவிதத்திலும் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு சண்டைகள் வந்தாலும், கொடைத்திறன் அல்லது வள்ளல் என்ற பேச்சு வந்து விட்டால் சிவாஜி ஒரு கஞ்சத்தனமானவர் என்ற பேச்சு தான் வெளியில் வரும். ஆனால் அது உண்மை இல்லை. சிவாஜியும் பல உதவிகளை செய்திருக்கிறார். ஆனால் அது எதுவுமே வெளியில் தெரியாததால் பெரிதாக பேசப்படவில்லை.

Also Read:எம்ஜிஆரின் கல்லாபெட்டிய நிரப்பிய 5 படங்கள்.. சிவாஜியிடம் இருந்து திரும்பி ஓடி வந்த தயாரிப்பாளர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நாடகங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வீரபாண்டிய கட்டபொம்மன். இந்த நாடகம் நூற்றுக்கும் அதிகமான தடவை மேடையில் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. அதில் சிவாஜி கணேசன் பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்து விட்டு, மீதம் இருந்த 32 லட்சத்தை தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு வழங்கியிருக்கிறார்.

மழை வெள்ளம், இயற்கை பேரிடர் போன்ற பல நேரங்களில் சிவாஜி நன்கொடையாக அதிக தொகைகளை கொடுத்திருக்கிறாராம். தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் இவர் பல உதவிகளை செய்திருக்கிறார். ஆனால் இவர் செய்த பல உதவிகள் எம்ஜிஆர் அளவுக்கு வெளியில் தெரியாமலே போய்விட்டது.

Also Read:சிவாஜியை பட்டை தீட்டிய எம் ஆர் ராதா.. நடிகவேல்-லை பார்த்து மிரண்ட நடிகர் திலகம்

Trending News