எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்கமாகி போச்சு.. 50 வயதை நெருங்கியும் சிங்கிளாக சுற்றும் ஹீரோ

இளம் வயதிலேயே ஹீரோவாக அறிமுகமான இவர் எல்லோருக்கும் மிகவும் மரியாதை கொடுப்பவராக நடந்து கொண்டார். ஆனால் சற்று மார்க்கெட் ஏற அவருடைய நடவடிக்கையும் மாறத் தொடங்கியது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பாரபட்சம் பார்க்காமல் கெத்து காட்ட ஆரம்பித்தார். அப்போது அவருடைய படங்களும் நன்றாக ஓடியதால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் அவரது குறும்புத்தனத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. அதாவது லிஸ்டில் அடங்காத அளவுக்கு நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்தார் ஹீரோ. திறமை மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உடையதால் நடிகைகள் அவரது காதல் வலையில் சிக்கி விட்டனர்.

Also Read : டான்ஸ் நடிகையை வேட்டையாடிய முன்னணி ஹீரோ.. பணத்தை சுருட்டிக்கொண்டு கழட்டி விட்ட சோகம்

பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாட்டு பிள்ளையாக சுற்றித்திரிந்த ஹீரோ தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளி போட்டு வருகிறார். ஆரம்பத்தில் திருமணத்தை தள்ளி போட பல்வேறு காரணங்களை நடிகர் சொல்லிக்கொண்டு இருந்தார். அவருடைய குடும்பமும் எப்படியாவது இவருக்கு கால்கட்டு போட்டு விட வேண்டும் என்று நினைத்தனர்.

ஆனால் எதற்கும் சிக்காத அந்த நடிகர் இப்போது வரை ரீல் ரீலாக சுத்தி வருகிறார். மேலும் அவருடைய நண்பர்கள் எல்லோரும் குடும்பம், குட்டி என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் ஹீரோவையும் திருமணம் செய்து கொள்ள டார்ச்சர் செய்தால், எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்கமாகி போச்சு என பாடல் வரியை அவிழ்த்து விடுகிறாராம்.

இப்போது நடிகர் 50 வயதை நெருங்கும் நிலையில் சிங்கிளாகவே சுற்றி வருகிறார். இனிமேல் அவருக்கு பெண் பார்த்து கல்யாணம் முடிக்க வேண்டும் என்றால் அறுபதாவது கல்யாணம் தான் செய்ய வேண்டும் என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது. அதற்குள் ஹீரோவே பார்த்து சட்டுபுட்டு என்று ஏதாவது செய்தால் தான் உண்டு.

Also Read : குடி போதையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய ஹீரோ.. கார் பார்க்கிங் கசமுசாவால் சிக்கிய ஜோடி