வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோடியில் கொட்டி கொடுத்தாலும் படம் பண்றது இல்ல.. ஹீரோவின் சங்கார்த்தமே வேணாம் என ஒதுங்கிய மாறன்

Kalanithi Maran: சன் நெட்வொர்க்கின் உரிமையாளரான கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் வசூலை வாரி குவித்தது. இதுவரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படி ஒரு லாபத்தை பார்த்ததில்லை.

இந்த சூழலில் ரஜினியை தனது அடுத்த படத்திற்கும் உடனடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் லாக் செய்து வைத்தது. அதன்படி லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்நிலையில் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் பண்ணவில்லை என்று ஒரு ஹீரோ சொல்லிவிட்டாராம்.

Also Read : ஆணவ பேச்சா இருக்கே, ஆதி குணசேகரன் விட சூப்பராக நடிப்பேன்.. பணத்தை கொட்டிக் கொடுக்க தயாரான கலாநிதி

ஆகையால் உங்கள் சங்கார்த்தமே வேண்டாம் என கலாநிதி மாறனும் ஒதுங்கி விட்டார். அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சுறா, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது. போதாக்குறைக்கு கலாநிதி மாறன் ஜெயிலர் விழா மேடையில் ரஜினியை புகழ்ந்து பேசி விஜய்யை நக்கல் அடித்து இருந்தார்.

இதுவே விஜய்க்கு கோபத்தை உண்டாக்கி இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் அரசியலுக்கு வர இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இப்போது ஆளுங்கட்ச்சியாக இருக்கும் திமுக உடன் தான் கலாநிதி கூட்டணி வைத்திருக்கிறார். அரசியலிலும் மாறன் கூட்டணி சக்கை போடு போட்டு வருகிறார்கள்.

Also Read : ரஜினி, லோகேஷுக்கு கொடுக்கும் தலைவலி.. சன் பிக்சர்ஸ்-சை விட இவர் தொல்லை தாங்க முடியல

இப்போது விஜய் அரசியலுக்கு வந்தால் திமுகவுக்கு தான் தலைவலியாக இருக்கும். ஆகையால் இனி விஜய்யை வைத்து படம் எடுத்தால் அது ஸ்டாலின் குடும்பம் மற்றும் கலாநிதி குடும்பம் இடையே பிரச்சனைக்கு வழிவகுக்கும். விஜய்யும் இப்போது சன் பிக்சர்ஸ் உடன் நடிக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்.

ஆகையால் அடுத்துஅடுத்து ரஜினி, தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டு வரும் நிலையில் அவர் அரசியல் நுழைவுக்கு பிறகு கண்டிப்பாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க மாட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also Read : விஜயகாந்துக்கே அப்பன் நான்.. ஜெயலலிதா முன் சொடுக்கு போட்டு பேசிய ரஜினியின் தைரியம்

Trending News