ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சூப்பர் ஸ்டார் அளவுக்கு ஓவர் பில்டப் கொடுத்து பல்பு வாங்கும் நடிகர்.. அடுத்தடுத்து விழும் மரண அடி

Actor Rajini: சினிமாவுக்கு வரும் பெரும்பான்மையான ஹீரோக்கள் ரஜினியை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து வந்தவர்களாகத் தான் இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்களது படத்திலும் ரஜினியின் சாயலில் நடிப்பதும் உண்டு. இன்னிலையில் சூப்பர் ஸ்டார் அளவுக்கு ஓவர் பில்டப் கொடுத்து பல்பு வாங்கிய ஒரு நடிகர் இருக்கிறார்.

நடன இயக்குனராக தனது பயணத்தை லாரன்ஸ் தொடங்கினாலும் அதன் பிறகு நடிகராக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஹீரோவாக இறங்கிவிட்டார். அப்படி அவர் நடித்த முனி மற்றும் காஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் லாரன்ஸ் தன்னை பெரிய ஹீரோவாகவே பாவித்து கொண்டார்.

Also Read : ஜெய்ப்பதற்கு ரஜினி பயன்படுத்தும் ஃபார்முலா.. அப்படியே கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய்

அதுமட்டும் இல்லாமல் தன்னை ரஜினி ஆகவே லாரன்ஸ் நினைத்துக் கொண்டார் என்றும் ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். அதாவது ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் தொடர்ந்து அவரைப் போன்று படங்களில் பிரதிபலிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்போது அவர் தொடர்ந்து தோல்வி முகத்தை மட்டுமே பார்த்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியானது. ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் இப்போதும் ரசிகர்கள் மனதில் ஒரு நிலையான இடத்தில் இருந்தது. அதை கெடுக்கும் விதமாகத்தான் இப்போது சந்திரமுகி 2 படம் வெளியாகி இருப்பதாக ரசிகர்கள் குமுறி வந்தனர்.

Also Read : லோகேஷ், நெல்சன் தான் எனக்கு தெய்வம் மாதிரி தெரியுறாங்க.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட லாரன்ஸ் மாஸ்டர்

அதுவும் நடிப்பு அரக்கியாக பார்க்கப்பட்ட கங்கனா ரனாவத்தை இந்த படத்தில் படு மொக்கையாக காண்பித்து விட்டார்கள். இவ்வாறு லாரன்ஸ்க்கு சந்திரமுகி 2 படமும் கைவிட்டு விட்டது. வருஷத்திற்கு குறைந்தது ஐந்து படமாவது லாரன்ஸ் நடிப்பில் வெளியானாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் வெற்றி பெறவில்லை.

இதனால் இப்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் போன்ற இயக்குனர்கள் எடுக்கும் படம் போல தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறாராம். அதுவும் அவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது சந்தேகம்தான். மேலும் லாரன்ஸ்க்கு வில்லன் கதாபாத்திரம் கரெக்ட்டாக பொருந்தும் என்றும் அதேபோல் தேர்ந்தெடுத்தால் சினிமாவில் நீடித்து இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் பார்த்த சித்தா.. மரண அடி வாங்கிய லாரன்ஸ், ஜெயம் ரவி படம்

Trending News