புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஓவர் நெருக்கம் காட்டும் சூர்யா.. எல்லா பக்கமும் கூடவே ஒட்டிக்கொண்டு சுற்றும் ஹீரோயின்

நடிகர் சூர்யா தமிழ் சினிமா துறையில் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத ஒரு நடிகர். மது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் பெரும்பாலும் நடிக்க மாட்டார். அதே போன்று அவரைப் பற்றி எந்த பெண்களுடனும் இதுவரைக்கும் கிசுகிசு என்பது வந்ததே கிடையாது . இதை நிறைய மேடைகளில் பல சினிமா பிரபலங்கள் அவரைப் பற்றி பேசும்போது சொல்லி இருக்கின்றனர்.

சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகை என்றால் அது ஜோதிகா மட்டும்தான். இருவரும் காதலிக்கிறார்கள் என்று அவ்வப்போது கிசுகிசு செய்திகள் வந்து கொண்டே இருக்கும். அதை பற்றி இருவருமே எந்த மேடையிலும் பேசியதில்லை. ஆனால் அவருடைய சினிமா வாழ்க்கையில் அவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகையான ஜோதிகாவையே அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவரைப் பற்றி இது போன்ற செய்திகள் வந்ததே கிடையாது.

Also Read: லியோவை ப்ரீ பிசினஸில் முந்திய சூர்யா 42.. உண்மை நிலவரத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

ஆனால் தற்போது நடப்பதை பார்த்தால் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். சூர்யாவுடன் ஒரு பிரபல நடிகை நெருக்கம் காட்டுவதாக தற்போது செய்திகள் பலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வதந்தியால் சூர்யாவின் பெயரை கொஞ்சம் டேமேஜ் ஆகும் அளவிற்கு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தன்னுடைய 42வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இவர் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமான ஹீரோயின். தற்போது தமிழிலும் சூர்யா 42 திரைப்படத்தின் மூலம் நேரடியாக அறிமுகமாகிறார்.

Also Read:இயக்குனர்கள் கொடுத்த டார்ச்சரால் அஜித் கைவிட்ட 5 படங்கள்.. லட்டு மாதிரி சூர்யாவிற்கு அடித்த ஜாக்பாட்

இந்த நடிகை தான் தற்போது சூர்யாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறாராம். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இவர் சூர்யாவுடன் அவருடைய கேரவனில் தான் இருக்கிறாராம். அவருக்கு டீ முதல் சாப்பாடு வரை கேரவனுக்குத்தான் கொண்டு போகிறார்களாம். இதனால் திஷா நடிகர் சூர்யாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருவதை படக்குழுவும் கவனித்து வருகிறார்கள்.

சூர்யா பல முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால் அவரைப் பற்றி இதுவரை எந்த ஒரு வதந்தியும் வந்ததில்லை. தற்போது இந்த நடிகையுடன் நெருக்கம் காட்டுவதாக வரும் செய்திகள் சினிமா வட்டாரத்தையே கொஞ்சம் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தி இருக்கிறது. அவர் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்ளவில்லை என்றால் அவருடைய பெயர் மொத்தமாக கெட்டுவிடும்.

Also Read:திருமணத்திற்கு பின்னும் பிஸியாகி சுற்றி வரும் ஜோதிகா.. அக்கட தேசத்தில் அடித்த ஜாக்பாட்

Trending News