புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜய் கூட நடிக்கும் போதே அந்த படம் பிளாப் ஆயிடும்னு தெரியும்.. எரியுற நெருப்புல எண்ணெய் ஊற்றிய நடிகை

Actor Vijay: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்த நாளிலிருந்து ஒட்டுமொத்த சமூக வலைத்தளத்திலும் நடிகர் விஜய்யை குறி வைத்து அவரை கிண்டல் செய்வது மற்றும் அவருடைய பிளாப் படங்களை பற்றி ட்ரோல் பண்ணுவது என்ற வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டது. பீஸ்ட் படத்தை பற்றி ரஜினி என்னவோ சொல்ல நினைக்க, அதை வேறு மாதிரி திரித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இப்படி ஒட்டு மொத்த சோசியல் மீடியாவும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், நடிகை ஒருவர் அதில் எண்ணெய் ஊற்றும் விதமாக விஜய்யின் இந்த படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது, இது தான் என் கேரியரில் நான் தவறாக தேர்வு செய்த படம் என்று அவருடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

Also Read:செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய விஜய்யின் அப்பா.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்

தமிழ் சினிமாவில் பல நாட்களாக தலை காட்டாமல் இருந்தாலும், ஒரே பாடலின் மூலம் மீண்டும் ட்ரெண்ட் ஆகி இருக்கும் தமன்னா தான் அந்த நடிகை. ஜெயிலர் படத்தில் காவாலா என்னும் பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் தமன்னா படத்தின் பிரமோஷன்க்காக பல இன்டர்வியூகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்படி ஒரு இன்டர்வியூவில் கலந்து கொண்ட தமன்னாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் தவறாக தேர்வு செய்து நடித்த படம் சுறா தான். சுறா படத்தில் நடித்திருக்கவே கூடாது. இனிமேல் அது போன்ற படங்களை நான் தேர்வு செய்யவும் மாட்டேன் என்று பேசிய அவர், அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது படம் கண்டிப்பாக ப்ளாப் ஆகி விடும் என எனக்குத் தெரியும் என்றும் சொல்லி இருக்கிறார்.

Also Read:லியோவை ஓரங்கட்டிய ஜெயிலர்.. எகிறிய பிசினஸால் தூக்கத்தை தொலைத்த விஜய்

தற்போது தமன்னா பேசிய இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே பீஸ்ட் படத்தை ஜெயிலர் ஆடியோ லான்ச் முடிந்ததிலிருந்து வச்சு செய்து கொண்டிருக்கும் நெட்டிசன்கள் தற்போது மீண்டும் சுறா படத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து விஜய் படத்தை பற்றி பிரபலங்கள் பேசி வருவது அவரை மொத்தமாக டார்கெட் செய்வது போல் இருக்கிறது.

தமன்னாவின் இந்த பதிலுக்கு விஜய் ரசிகர்கள் மொத்தமாக கொந்தளித்து இருக்கிறார்கள். தமன்னா வளர்ந்து வரும் ஹீரோயினாக இருக்கும்பொழுது அவருக்கு கிடைத்த முதல் டாப் ஹீரோ படத்தின் வாய்ப்பு என்றால் அது சுறா தான். மேலும் அவர் இதைவிட மோசமான படங்களிலும் நடித்திருக்கும் பொழுது விஜய் படத்தை பற்றி பேசுவது சரி இல்லை என பதிலுக்கு விஜய் ரசிகர்கள் தமன்னாவை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Also Read:யாரு சொன்னா விஜய்ய தப்பா பேசினாருன்னு.. தூக்கி விட்டு அழகு பார்த்த ரஜினி, இவர் கூடவா போட்டி?

Trending News