வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நானும் பான் இந்தியா ஹீரோ தான் என விக்ரம் தொடங்கிய 62வது படம்.. வெற்றி இயக்குனருடன் கூட்டணி

Chiyaan 62 Update: நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்களான் படத்தில் நடித்து வருகிறார். சுதந்திரத்திற்கு முன்பு தங்க சுரங்கத்தில் வேலை பார்த்த கூலி தொழிலாளர்களின் நிலைமையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

அதே நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தின் மீதி வேலைகள் எல்லாம் முடிக்கப்பட்டு, தற்போது அதையும் ரிலீஸ் செய்ய அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்ய இருக்கும் நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

Also Read:சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி.. நண்பனுக்காக அரங்கேறிய சம்பவம்

நடிகர் விக்ரமுக்கு நான் மகான் அல்ல, கோப்ரா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கேரக்டர் மக்களிடையே பெரிய ரீச்சை அடைந்தது. விக்ரம் ரசிகர்கள் தற்போது அவருடைய அடுத்தடுத்த வெற்றி படங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் விக்ரமின் 62 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் மலையாளத்தில் ரிலீஸ் ஆகி உலக அளவில் வெற்றி பெற்ற 2018 என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் உடன் விக்ரம் இந்த படத்தில் இணைய இருக்கிறார். இந்த படம் மல்டி ஸ்டார்ஸ் படமாகவும், பான் இந்தியா மூவியாகவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Also Read:தங்கலான் போல உருமாறிய துருவ் விக்ரம்.. மாரி செல்வராஜால் ஏற்பட்ட மாற்றம், தீயாய் பரவும் புகைப்படம்

சீயான் விக்ரமின் 62 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். எதார்த்தமாக நடிக்கும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து ஒரு படத்தில் நடித்தால் கண்டிப்பாக அது தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும்.

விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, கிச்சா சுதீப் மற்றும் நிவின் பாலி ஆகியோரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் படமாக இருக்கும் என தெரிகிறது. படத்தைப் பற்றி விரைவில் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:வாணி போஜன் போல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட அவமானம்.. விக்ரம் படத்தால் அடுத்தடுத்து விழும் பெரிய அடி

Trending News