புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Vishal: சைலன்டா விஷால் படத்துக்கு வந்த ஆப்பு.. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ரத்னம் தம்பி

Actor Vishal: விஷால் நடிப்பில் உருவான ரத்னம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே ட்ரெய்லரில் காது கூசும் கெட்ட வார்த்தைகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குனர்.

இப்போது எல்லாம் கெட்ட வார்த்தைகள் சகஜம் ஆகிவிட்டது. அதைத்தான் படத்தில் காட்டி இருக்கிறேன் என விளக்கம் வேறு கொடுத்தார். இப்படி படத்திற்கு ப்ரமோஷன் ஜோராக நடந்தது.

அதேபோல் விஷால் ஒரு பக்கம் உதயநிதியை வம்புக்கு இழுத்து பேசி பேட்டி கொடுத்தார். அதேபோல் ரத்னம் படத்தில் நிச்சயம் பிரச்சனை வரும் என்றெல்லாம் பிட்டு போட்டார்.

எல்லா பக்கமும் இடி வாங்கிய ரத்னம்

அதற்கேற்ற மாதிரி சில கட்டப்பஞ்சாயத்துகள் நடந்து படம் வெளியானது. ஆனால் இந்த ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணா போனதுதான் மிச்சம். படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வரவேற்பு பெறாமல் போனது.

அதே நேரத்தில் சத்தம் இல்லாமல் வெளி வந்த ஒரு படம் இப்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார் நடிப்பில் வெளியான ஒரு நொடி இப்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதனால் பல திரையரங்குகள் இப்போது ரத்னம் படத்திற்கான காட்சிகளை குறைத்து விட்டார்கள். அதற்கு பதிலாக ஒரு நொடி திரையிடப்பட்டு வருகிறது.

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் வெளியான ஒரு நொடி விஷாலுக்கு சத்தமில்லாமல் ஆப்பு வைத்து விட்டது. இதனால் சொந்த செலவில் சூனியம் வைத்த கதையாக ரத்னம் அடிவாங்கியுள்ளது.

Trending News