புதன்கிழமை, ஜனவரி 8, 2025

20 கோடி செலவில் பிரம்மாண்ட விவசாயச் சந்தை கட்டமைக்கப்படும்.. தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சந்தை படுத்துவதற்காகவும், அவர்கள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் நோக்கத்தில், சுமார் 10 மாவட்ட தலைநகர்களில் 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட விவசாயச் சந்தை  கட்டமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தற்போது தென்காசி பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இதனால் விவசாயிகள் தங்கள் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்ற பூரிப்பில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அதே போல் ஒரு பெரிய சந்தையை நெல்லையிலும் கட்ட தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்தும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியும் விவசாயிகளின் கடன் சுமையை குறைத்த தமிழக அரசு,

தற்போது 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான விவசாய சந்தையும் கட்டமைக்கப்பட உள்ளது விவசாயிகளின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருவது பலர் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Trending News