செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இனிமேல் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் ஓனர் இவங்கதான்.. திட்டமிட்டு பொறுப்பை ஒப்படைக்கும் உதயநிதி

உதயநிதி ஸ்டாலினால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் ரெட் ஜெயண்ட் சினிமா நிறுவனம். இதன் முதல் படமாக தளபதி விஜயின் குருவி படம் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் ஆதவன், ஏழாம் அறிவு, நீர்ப்பறவை,வணக்கம் சென்னை, மனிதன் போன்ற வெற்றி படங்களை இந்த நிறுவனம் தான் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு உதயநிதி, தயாரிப்பாளரிலிருந்து ஹீரோவாக மாறினார். இவர் நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி 175 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. அதன் பின்னர் இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, சரவணன் இருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவருடைய நடிப்பில் மனிதன் மற்றும் சைக்கோ குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.

Also Read: வாரிசு அட்வான்ஸ் புக்கிங் எண்ணிக்கையில் பாதி கூட தாண்டாத துணிவு.. உதயநிதிக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி

இப்படி நடிப்பு துறையில் இருந்த இவர் 2018 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். அந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக கட்சிக்காக பரப்புரையில் ஈடுபட்டார். அதே ஆண்டு திமுக இளைஞர் அணி தலைவர் ஆனார். பின்பு 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ ஆனார்.

எம்எல்ஏ ஆன பின்பும் கூட பட விநியோகத்தில் படு பிசியாக இருந்தார். இன்றைய கோலிவுட்டின் மிகப்பெரிய ஜாம்பவானாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் இருக்கிறது. சமீபத்தில் அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வாங்கியிருக்கிறது. இதற்கிடையில் ஒன்றரை வருட ஆட்சிக்கு பிறகு இப்போது உதயநிதி திமுக அமைச்சரவையில் 35வது அமைச்சராகி இருக்கிறார்.

Also Read: உதயநிதியை தலையில் துண்டை போட வைத்த 5 படங்கள்.. நயன்தாரா, நண்பனை நம்பி மூக்குடைந்த சோகம்

அமைச்சரான பிறகு கொடுத்த பேட்டியில் மாமன்னன் திரைப்படம் தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என்று சொல்லிவிட்டார். மேலும் தன்னுடைய ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு நிர்வாகியாக தன்னுடைய குடும்பத்தில் ஒருவரை நியமிக்க இருக்கிறார். எனவே இப்போது போஸ்டரில் ரெட் ஜெயின்ட் மூவீஸ் வழங்கும் மட்டும் தான் போடுகிறார்கள். உதயநிதி பெயர் இல்லை.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் அடுத்த நிர்வாகியாக உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி பொறுப்பேற்க இருக்கிறார். கிருத்திகா 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பின்னர் காளி திரைப்படத்தையும், பேப்பர் ராக்கெட் வலை தொடரையும் இவர்தான் இயக்கினார்.

Also Read: 56 வயதில் ஸ்டாலினுக்கு கிடைத்த பதவி.. 45 வயதிலேயே கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின், என்ன பொறுப்பு தெரியுமா?

Trending News