ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சேது போல் நவரச நாயகனுக்கு லேட் பிக்கப்பான சூப்பர் ஹிட் மூவி.. கேப்டனால் உதயம், காசி என ஒதுக்கப்பட்ட படம்

Actor Karthik: சினிமாவை பொருத்தவரை எத்தனையோ படங்கள் நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒரு சில படங்கள் மூலமாகத்தான் மக்களிடம் பிரபலமாகுவார்கள். இதே வைத்துக் கொண்டு அடுத்தடுத்து அவர்கள் முன்னேறி தொடர் வெற்றியை கொடுத்து வருவார்கள். அப்படித்தான் விக்ரம் சேது படத்திற்கு முன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் அவருக்கு ஒரு அங்கீகாரமாக கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது சேது தான். அதே மாதிரி  நவரச நாயகன் கார்த்திக் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் பல திரையரங்குகளில் இவருடைய படத்தை ரிலீஸ் செய்வதற்கு யாரும் முன் வருவதில்லை.

Also read: விக்ரம் போல கட்டுமஸ்தானாக மாறிய துருவ் விக்ரம்.. மாரி செல்வராஜ் வெளியிட்ட புகைப்படம்

அதையும் மீறி ரிலீஸ் செய்தால் மொத்தமே திரையரங்குகளில் 30 பேர்கள் மட்டுமே வந்து பார்ப்பார்களாம். அதனாலேயே திரையரங்க உரிமையாளர்கள் கார்த்திக் படம் என்றாலே வாங்க மறுத்து விடுவார்களாம். அதே மாதிரி கார்த்திக் நடித்த இன்னொரு படத்தை யாரும் வாங்குவதற்கு வரவில்லை.

அதற்கு காரணம் அப்பொழுது விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த தாயகம் படம். விஜயகாந்துக்கு கார்த்திகை விட மவுஸ் இருந்ததால் அனைத்து தியேட்டர்களிலும் இவருடைய படம் தான் ரிலீஸ் ஆனது. உதயம், காசி என முக்கியமான தியேட்டர்கள் எல்லாம் விஜயகாந்த் படத்துக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் கார்த்திக் நடித்த படத்தை வாங்குவதற்கு மறுத்துவிட்டார்கள்.

Also read: எங்கு போனாலும் கேப்டனின் பேச்சு தான்.. ஹிந்தி நடிகருக்கு முதல் வாய்ப்பை கொடுத்த விஜயகாந்த்

அதன் பின் வேறு வழி இல்லாமல் லோக்கல் தியேட்டரில் கார்த்திக் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீசான இரு நாட்களிலேயே படம் பிச்சுகிட்டு வசூலில் அளவிலும், விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. அதன் பிறகு இவருடைய படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு உதயம், காசி போன்ற பல தியேட்டர்கள் போட்டி போட்டு படத்தை ரிலீஸ் செய்தார்கள்.

அதன் பிறகு அனைத்து தியேட்டர்களிலும் கார்த்திக் படத்தை ரெகுலர் ஷோவாகவே போட ஆரம்பித்து விட்டார்கள். அப்படி முதலில் வாங்க மறுத்த படம் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் தான். இப்படம் தான் கார்த்தியின் சினிமா கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

Also read: 90களில் கார்த்திக் உண்டாக்கிய தனி சாம்ராஜ்யம்.. ட்ராக்கை மாத்தி பல ஹீரோக்களுக்கு தண்ணி காட்டிய நவரச நாயகன்

Trending News