வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யை எதிர்த்ததால் அசிங்கப்பட்டு பதவி விலகிய தலைவர்.. கசக்கி பிழிந்த சம்பவம்

A Leader Resigned Because Of Vijay: கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய், இப்போது அரசியலிலும் களம் இறங்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருடைய லியோ படம் உலகம் முழுவதும் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் லியோ படத்தால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக விஜய்யை எதிர்த்துப் பேசிய தலைவர் இப்போது அசிங்கப்பட்டு ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பு கிளப்பி இருக்கிறது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பதவியில் இருக்கும் திருப்பூர் சுப்ரமணியம், எப்போதுமே எந்த விஷயத்தையும் ஸ்ட்ராங்காக பேசக்கூடியவர். அவர் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். அவர் லியோ படத்திற்கு எதிராக அளித்த பேட்டியால் பெரிய பிரச்சனைகள் மாட்டிக் கொண்டார்.

‘லியோ திரைப்படம் லாபகரமாக அமையவில்லை. இதற்குக் காரணம் இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவு ஷேர் பங்கீடு வாங்கி இருக்கிறார்கள். பெரும்பாலும் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த படத்தை விரும்பி போடவில்லை, அந்த அளவிற்கு அதிகமாக ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்களையும் கசக்கி பிழிந்து விட்டனர். இந்த படத்தின் வசூல் அதிகமாக இருந்தாலும் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. எங்களுக்கு அதிக லாபமும் இந்த படத்தால் கிடைக்கல. ஆனா இதை படம் பக்கத்து மாநிலமான கேரளாவில் 60% வெளியிட்டு இருக்கிறார்கள். எங்களிடம் 80 சதவீதம் வாங்கி இருக்கிறார்கள்.

Also Read: விஜய் பண்ற வேலையெல்லாம் பார்த்தா கடைசில ராமராஜன் கதி தான்.. தலைவர பார்த்து திருந்துங்க ப்ளீஸ்!

இந்தப் படத்துடன் இன்னொரு படம் மட்டும் ரிலீஸ் ஆகி இருந்தால் இப்போது கிடைத்திருக்கும் தியேட்டரில் பாதி கூட லியோ-விற்கு கிடைத்திருக்காது. வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது தான் லீயோ படத்தை தியேட்டரில் திரையிட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் திரையிட்டோம். அதுமட்டுமல்ல லியோ தயாரிப்பாளர் சொன்ன வசூல் விவரமும் முற்றிலும் பொய்’ என்று திருப்பூர் சுப்ரமணியம் பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்தது.

பதவி விலகிய திருப்பூர் சுப்ரமணியம்

இதனால் தளபதி ரசிகர்கள் கொந்தளித்து சோசியல் மீடியாவிலும் இவரை வறுத்தெடுக்கின்றனர். அத்துடன் தீபாவளியை முன்னிட்டு வெளியான டைகர் 3 படத்தை திருப்பூர் சுப்பிரமணியனுக்கு சொந்தமான தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ காட்சிகளை அரசு அனுமதி இன்றி திரையிட்டதையும் நெட்டிசன்கள் ட்விட்டர் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர். இப்படி திருப்பூர் சுப்பிரமணியனுக்கு எதிராக பல விஷயங்கள் கிளம்பியதால் இப்போது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,’ நான் சொந்த வேலை காரணமாக பதவி விலகுகிறேன். நானும் மனிதன் தான், 100% தவறு இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எனக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல விஜய்யை எதிர்த்ததால் அசிங்கப்பட்டு தலைவரே ராஜினாமா செய்து விட்டார் என்று தளபதி ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: விஜய்யை வைத்து படம் எடுத்து காணாமல் போன 6 முதலாளிகள்.. காலை வாரிவிட்ட புலி

Trending News