செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஆண்டவர் சொல்லி கொடுத்த பாடம்.. மேடையில் மைக் மோகன் பெருமிதம்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்தவர் மைக் மோகன். தற்போதைய காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படங்கள் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மைக் மோகன் படங்களும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் திரையரங்குகளில் அதிக நாள் இவருடைய படங்கள் வெற்றிகரமாக ஓடியது.

இதனால்தான் மைக் மோகனுக்கு வெள்ளி விழா நாயகன் என்ற பெயரும் உண்டு. இந்நிலையில் மோகன் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் நேற்று ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை மோகன் பகிர்ந்து கொண்டார்.

Also Read :விஜய் மாமா செய்த பித்தலாட்டம்.. ஈகோவால் கேரியரை தொலைத்த மைக் மோகன்

அதாவது ஹரா என்ற படத்தின் மூலம் மோகன் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார். இந்நிலையில் விழா மேடையில் பேசிய மோகன் கமலஹாசனை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது மோகனின் அறிமுகப்படம் கோகிலா. இந்த படத்தில் கமலஹாசன், ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். இந்நிலையில் மோகன் பேசுகையில், அப்போதும் சரி இப்போது சரி கமலின் கால்சூட் என்பது மிகப்பெரிய விஷயம். அந்த சமயத்தில் கமல்ஹாசன் சூட்டிங் வரும்போது நான் வேறு ஒரு படத்தின் சூட்டிங்காக சென்றுவிட்டேன். மறுநாள் எல்லோரும் என் மீது கோபமாக இருந்தார்கள்.

Also Read :300 கோடியை தாண்டி வசூல் செய்த டாப் ஹீரோக்கள்.. அடுத்த வேட்டைக்கு தயாராகும் விஜய், கமல்

ஏனென்றால் கமலின் நாட்களை தவறவிட்டு விட்டோம் என பாலு மகேந்திரா வருத்தமாக பேசினார். ஆனால் என்னுடைய மூத்த அண்ணன் கமலஹாசன் என்னிடம் வந்து என்ன காரணம் என்று கேட்டார். எனக்கு இதைப் பற்றி தெரியாது, நான் வேறு ஒரு படத்தின் சூட்டிங்காக சென்றுவிட்டேன் என்று கூறினேன்.

முதல் படம் நடிக்கும் போதே அடுத்த படத்திற்கான வாய்ப்பு வந்துவிட்டதா. சரி ஒரு டைரில் எல்லா படத்திற்கான தேதிகளையும் எழுதி வைத்துக் கொள். அப்போது தான் உனக்கு எதுவும் மறக்காது என ஆண்டவர் அறிவுரை சொன்னார். அதிலிருந்து கமலஹாசன் சொன்னது போல் தொடர்ந்து பின்பற்றி வந்ததாக பெருமிதமாக மோகன் கூறியிருந்தார்.

Also Read :4 வெற்றி படங்களையும் கொண்டாடும் கமல்.. மேடையில் சிலாகித்த உலகநாயகன்!

Trending News