வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிறுத்தையுடன் மோத போகும் சிங்கம்.. லோகேஷின் எல்சியு-வின் அடுத்த பிரம்மாண்டம்

Director Lokesh Kanagaraj: தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனராய் வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து பல படங்களை தன் கைவசம் வைத்துக் கொண்டிருக்கும் இவரிடம் அப்டேட் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

தற்பொழுது விஜய்யின் லியோ படப்பிடிப்பினை முடித்துள்ள லோகேஷ் அடுத்து ரஜினி வைத்து படம் இயக்கப் போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே விக்ரமுக்கும், கைதி 2விற்கும் கனெக்ஷன் உண்டு என்ற விஷயம் அனைவரும் அறிந்து ஒன்றே.

Also Read: வங்கி வேலையை விட இதுதான் காரணமாம்.. வித்தியாசமாக மனுஷன் என நிரூபித்த லோகேஷ்

மேலும் சமீபத்தில் லியோவின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் போட்டியாய் களம் இறங்கியது. தற்போது போட்டிக்கு போட்டியாய் பார்க்கப்படும் இப்பாடல்களை முறியடிக்கும் விதமாய் லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து லோகேஷிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு செகண்ட் சிங்கிள் தாமதமாக தான் வெளியாகும் என கூறிய, அவரிடம் கைதி 2 குறித்த அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பிடி கொடுக்காமல் மழுப்பி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் இப்படத்தில் ரோலக்ஸ் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டமையால் கைதி 2 வில் சூர்யா இடம்பெற வாய்ப்புள்ளதாக உளறிவிட்டார்.

Also Read: சுயலாபத்திற்காக சூப்பர் ஸ்டாரை சீண்டும் விஜய்.. என்ன கட்டம் கட்டினாலும் உங்க பாட்ஷா பலிக்காது

ஏற்கனவே இவரின் யுனிவர்ஸ் குறித்து வெளியாகும் தகவல் எல்லாமே சஸ்பென்ஸ் ஆக தான் இருந்து வருகிறது. அவ்வாறு இருக்க, கைதி 2 வில் சூர்யா இடம்பெறுவது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மேலும் சிறுத்தையும், சிங்கமும் சேர்ந்து நடித்தால் படம் வசூலில் கல்லா கட்டும் என்பதற்காக இந்த முயற்சியாய் இருக்கும் என கூறப்படுகிறது.

அடுத்தடுத்து தன் படங்களில் ட்விஸ்ட் வைத்து வரும் இவருக்கு தொடர்ந்து ஜாக்பாட் தான் அடித்து வருகிறது. அந்த வகையில் கைதி 2 வில் இவர்களின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற சஸ்பென்சை உருவாக்கியுள்ளார். இவரின் எல் சி யு வில் ஏற்படப்போகும் ட்விஸ்ட்யை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

Also Read: தனுஷ், சிம்பு வேண்டவே வேண்டாம்.. ரீமேக் படங்களை ஒதுக்கி 27 அவார்டுகளை குவித்த இயக்குனர்

Trending News