திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டப்பிங் ஆர்டிஸ்ட் ரோகினி உருக உருக எழுதிய காதல் பாடல்.. திகைத்துப் போன கௌதம் மேனன்

பிரபல வில்லன் நடிகர் ரகுவரனின் மனைவியான ரோகினி நடிகை, திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர். பல திறமைகளை உள்ளடக்கிய ரோகினி விழா மேடைகளில் மாணவர்களுக்கு சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.

மேலும் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான ரோகினி தற்போது ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இது தவிர படங்களில் முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக ரோகிணி பணியாற்றியுள்ளார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய், மனிஷா கொய்ராலா, நதியா, ஜோதிகா போன்ற பலருக்கு இவர் தான் குரல் கொடுத்துள்ளார்.

Also Read : ரோகினிக்கு முன்பே பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

இந்நிலையில் ரோகினி பாடலாசிரியராக மாற உருவான தருணம் எப்போது என்பதை பார்க்கலாம். அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் ஜோதிகாவுக்கு ரோகினி டப்பிங் கொடுத்துள்ளார். அந்தச் சமயத்தில் நடிகை ரேவதியின் இயக்கத்தில் உருவான படத்திற்கு ரோகினி தான் திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்த சூழலில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது ரேவதியிடம் இருந்து ரோகினிக்கு அழைப்பு வந்துள்ளது. அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் இரண்டு வரிக்கு வசனம் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே டப்பிங்கை நிறுத்திவிட்டு அந்த வரிகளை ரோகனி எழுதிக் கொடுத்துள்ளார். இதை அருகில் இருந்து இயக்குனர் கௌதம் மேனன் கவனித்துள்ளார்.

Also Read : சாகும் வரை ரகுவரனுக்கு நிறைவேறாத ஆசை.. கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த சோகம்

அப்போது தான் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடல் வரிகள் எழுதுமாறு ரோகினிடம் கௌதம் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு ஒத்துக்கொண்ட ரோகினி பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் உனக்குள் நானே என்ற அற்புதமான பாடல் வரிகளை எழுதி இருந்தார். இதைக் கேட்ட கௌதம் மேனனே திகைத்துப் போனாராம்.

வேறு ஒரு கணவன், வேறு ஒரு மனைவி என வித்தியாசமான காதலை கொண்டுள்ள இந்த படத்தில் ரோகினி பாடல் வரிகளில் ஒன்று கூட கொச்சையாக இருக்காது. இந்த பாடலில் இடம் பெற்ற முதல் நான்கு வரிகள் ரோகினிக்கு மிகவும் பிடித்த வரிகளாம். மேலும் இதைத் தொடர்ந்து ரோகினி பல படங்களில் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

Also Read : கௌதம் மேனனை அசிங்கப்படுத்திய இளம் இயக்குனர்.. பெரிய மனுஷனாக பதிலடி கொடுத்த சம்பவம்

Trending News