வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கோபியை விச பாம்பாக கொத்தும் காதலி.. மீட்டிங்கில் முட்டிக் கொள்ளும் சக்காளத்திகள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 2-வது திருமணம் செய்து கொண்ட கோபி, பாக்யாவின் வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே ராதிகாவுடன் தங்கி இருந்து அவர்களை வெறுப்பேற்றுகிறார். பள்ளியில் நடக்கும் பேரன்ட்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ராதிகாவியும் அவருடைய மகளையும் காரில் கோபி அழைத்து செல்ல, பாக்யா தட்டு தடுமாறி தன்னுடைய மகளை ஸ்கூட்டியில் அழைத்து செல்கிறார்.

அப்போது பாக்யா வண்டியில் ஏறி உட்கார்ந்த பிறகு, ஸ்கூட்டியை சரியாக பிடிக்காமல் தடுமாறும் பாக்யாவை பார்த்து கோபி பரிதாபப்படுகிறார். கோபியின் இந்த பாசத்தை பார்த்ததும் ராதிகாவிற்கு கோபம் வந்து அவரை விச பாம்பாக கொத்திக் குடிக்கிறார்.

Also Read: பணம் பாதாளம் வரை செல்லும்.. விஜய் டிவியின் பித்தலாட்டத்தை வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி

இப்படி ஒரே தெருவில் இரண்டு மனைவிகளை சமாளிக்க முடியாமல் கோபிக்கு ஒவ்வொரு நாளும் சக்காளத்தி சண்டையை சரி கட்டுவதில் சரியாக இருக்கிறது. மேலும் இனியா படிக்கும் அதே பள்ளிக்கு மகளுக்காக பேலன்ஸ் மீட்டிங்கிற்க்கு வந்திருக்கிறார்.

இதை இனியாவின் தோழிகள் பார்த்துவிட உடனே இனியாவிடம் இதைப் பற்றி கேட்கிறார்கள். ‘உன்னுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா?’ என்று கேட்டதும் இனியாவிற்கு பெரும் சங்கடமாய் போனது. பிறகு அதை சமாளிக்கும் பாக்யா இனியாவின் தோழிகளிடம் ‘இதைப் பற்றி அவரிடமே கேளுங்கள்’ என்று திருப்பி விடுகிறார்.

Also Read: தாத்தா ஆகப்போற வயசுல அப்பாவான கோபி.. எல்லாம் காலக்கொடுமை

பிறகு இனியாவை ரெஸ்டாரண்டுக்கு அழைத்து செல்லும் பாக்யா அவருக்கு வேண்டியதை வாங்கி கொடுக்கிறார். அதற்கு முன்பே பாக்யா பேரன்ட்ஸ் மீட்டிங்கில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என கண்ணாடி முன்பு தனக்குத்தானே பேசி, மகளுக்கு தந்தையின் கவலை வந்து விடக்கூடாது என ஒரு அம்மாவாக அவர் மகளின் நலனுக்காக ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்து செய்து கொண்டிருக்கிறார்.

இதைப் பார்க்கும் இனியாவிற்கு பாக்யா மீது இப்போதுதான் அபரிவிதமான பாசம் ஏற்படுகிறது. ஒரு பக்கம் பாக்யாவிற்கு குடும்பத்தினரின் அன்பு மென்மேலும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் கோபியை குடும்பத்தினர் அடியோடு வெறுத்து கொண்டிருக்கின்றனர்.

Also Read: ராதிகாவிற்கு பொண்டாட்டியாக மாறிய கோபி.. பல்லு போன வயசுல பால்கோவா சாப்பிட நினைச்ச இப்படித்தான்

Trending News