வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மலையாள ஹீரோக்களை வெறுப்பேற்றிய பகத் பாசில்.. வரிஞ்சு கட்டிக்கொண்டு தமிழுக்கு வரும் அமுல் பேபி

Fahad Fazil: பகத் பாசில் மலையாள சினிமா உலகை சேர்ந்த நடிகராக இருந்தாலும், சமீப நாட்களாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இதற்கு மிக முக்கிய காரணம் மாமன்னன் படம் தான். இந்த படத்திற்குப் பிறகு பகத் பாசிலுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம் இன்று வரை சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது என்பது புதிதல்ல. மம்முட்டி, ஜெயராம், மோகன்லால் என அக்கட தேசத்து சூப்பர் ஸ்டார்கள் அத்தனை பேரும் தமிழில் நடித்து, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர்கள் தான். எப்பொழுதும் மற்ற மொழி கலைஞர்களை விட, தமிழ்நாட்டின் மலையாள சினிமா உலகை சேர்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது.

Also Read:இந்த வாரம் வெளிவர உள்ள 9 படங்களின் அப்டேட்.. கேஜிஎஃப் இயக்குனர், பிரபாஸ் காம்போ ஜெயிக்க வாய்ப்பிருக்கா?

ஆனால் இந்த நடிகர்களில் இவ்வளவு பெரிய அளவுக்கு கொண்டாடப்படுபவர் பகத் பாசில் மட்டும்தான். இவருடைய வெற்றி ஒட்டுமொத்த மலையாள சினிமாவுலகையும் வாய் அடைக்க செய்து இருக்கிறது. சொந்த மாநிலத்தில் பல வருடங்களாக நடித்து புகழ் பெற முடியாத நடிகர்கள், இவர் இப்படி ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களை தன் கை வசம் வைத்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள்.

பகத் பாசில் வில்லனாக வெற்றி பெற்றதை போல், முழு நேர ஹீரோவாக தமிழ் சினிமாவில் நடித்து அதேபோன்று வெற்றியை பெற வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறார் மலையாள வாரிசு நடிகர் ஒருவர். தமிழில் ஆனந்தம், அழகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தான் அந்த நடிகர்.

Also Read:நண்டு சிண்டெல்லாம் இயக்குனராகுது, நம்ம மட்டும் இப்படியே இருக்கோமே.. ஜேசன் சஞ்சய்யை பார்த்து ஆதங்கப்படும் விஷால்

ஏற்கனவே இவர் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். சமீபத்தில் இவர் நடித்த கிங் ஆப் கோத்தா படம் போட மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. இவர் தற்போது தமிழ் சினிமாவில் முழு நேர ஹீரோவாக நடிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

இவர் தற்போது தமிழில் கோலி என்னும் படத்தில் முழு நேர ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களிடம் சாக்லேட் பாய் ஹீரோவாக அறிமுகமானவர். இவருக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகைகளும் அதிகம் இருக்கிறார்கள். முழுக்க தமிழ் படம் நடிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக முன்னணி ஹீரோவாக இவர் வளர்ந்து விடுவார்.

Also Read:லைக்கா தயாரிப்பில் 2000 கோடிக்கு மேல் முதலீட்டில் வரிசையாக 11 படங்கள்.. விஜய் மகனையும் லாக் செய்த புத்திசாலித்தனம்

Trending News