இளையராஜா, ரஜினி தமிழ்நாட்டில் மூத்த கலைஞர்கள். ஒரு சாமியாரைபோல் இருவரும் பார்க்கப்படுகின்றனர். அப்படி ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கை நடத்தும் இருவரையும் மக்களும், ரசிகர்களும் உச்சத்தில் வைத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் இருவரையும் வாடா போடா என கூப்பிட்டு நட்பு பாராட்டும் சக நடிகரை மிகவும் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இப்பவும் இளையராஜாவையும், ரஜினியையும் மேடையில் வா போ என பேசுவார். ரஜினிகாந்த் ஒரு சாமியார் எந்த கோயிலுக்கு போய் இருக்கான் என்று கூட கேட்பாராம்.
இளையராஜாவை பார்க்க போனேன். நன்றாக உபசரித்தான். இன்னமும் பழைய எனர்ஜியோடு இருக்கிறான் என்றெல்லாம் மேடையிலேயே ஒரு முறை பேசி அசர வைத்தார். ,தெலுங்கு மாஸ் ஹீரோ மோகன் பாபு.
அண்ணன் ஒரு கோயில், தாய் மீது சத்தியம், அன்னை ஒரு ஆலயம், குரு, சூரரை போற்று போன்ற தமிழ் படங்களில் இவர் நடித்திருக்கிறார், சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கும் ஆபீசராக வருவார்.
தெலுங்கு உலகில் கொடி கட்டி பறந்த நடிகர் மோகன் பாபு . ரஜினி, இளையராஜாவுடன் இளமைப் பருவத்திலிருந்து நண்பர்களாக பழகியவர். ரஜினியுடன் பாண்டி பஜார் பிளாட்பார்மில் தூங்கி உள்ளாராம். இருவரும் பட்டினியாய் நிறைய நாட்கள் வாழ்க்கையை ஓட்டி இருக்கிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் அவர் மகனை ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த மேடையில் பேசும்போது மிகவும் இயல்பாக ரஜினி, இளையராஜா யார்உடன் இருக்கும் தன்னுடைய நட்பை பற்றி சிலாகித்து பேசினார். இப்பொழுது வயது மூப்பு காரணமாக மகன்கள் உடன் வசித்து வருகிறார்.