Maniratnam: கடவுள் எழுதுகிற தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாதுன்னு சொல்லுவாங்க. ஆனால் சிலர் தங்களுடைய மதியால் இதை மொத்தமாக மாற்றி விடுவார்கள். அப்படியே தன்னுடைய தலையெழுத்தை தானே எழுதிய நடிகரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.
சினிமாவை தன்னுடைய உயிராக நினைத்து அதற்காகவே பாடுபடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு சில ஜெயிக்க முடியாவிட்டாலும் வருட கணக்கில் சினிமா உள்ளேயே கிடந்து மொத்தத்தையும் இழந்தும் போய் விடுகிறார்கள்.
ஆனால் சரியான நேரத்தில் தனக்கு சினிமா கை கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து வேறு பாதையில் பயணிப்பவர்கள் ஒரு சிலரே. அதில் இந்த நடிகரும் ஒருவர்.
பொதுவாக மணிரத்தினத்தின் ஹீரோக்களை பெண் ரசிகைகளுக்கு ரொம்பவும் பிடித்து விடும். அதற்கு முக்கிய காரணம் ஒன்று அவர்களுடைய அழகு. இன்னொன்று படத்தில் அவர்கள் தங்கள் காதலியை காதலிக்கும் விதம்.
அப்படி பெண் ரசிகைகளை தன்னுடைய அழகில் வசீகரித்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இப்போது வரை தமிழ்நாட்டில் ஒரு ஆண் அழகாக இருப்பானா என்று கேட்பதற்கு அரவிந்தசாமி மாதிரி இருப்பானா என்று தான் கேட்பார்கள்.
மணிரத்னம் படம்னாலும் பிடித்தால் தான் ஆக்டிங்
அப்படி அழகுக்கு இலக்கணமாய் இருந்தவர் தான் அரவிந்த்சாமி. தளபதி படத்தில் ரஜினியின் தம்பி கேரக்டரில் நடித்தார். அதைத் தொடர்ந்து ரோஜா மற்றும் பாம்பே என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.
ஆனால் அதன் பின்னர் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவியது. இனியும் சினிமாவில் இருந்து பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என முடிவெடுத்து விட்டார். அவருடைய அப்பா VD சுவாமி நடத்திய தொழிலை கவனிக்க தொடங்கினார்.
2000 ஆம் ஆண்டு டேலண்ட் மேக்சிமம் என்னும் தொழிலை தொடங்கினார். இந்தியாவில் உள்ள கம்பெனிகளுக்கு வேலை செய்யும் ஆட்களை தேர்ந்தெடுத்து கொடுக்கும் நிறுவனம் இது. இதன் மூலம் ஐந்து வருடத்தில் தன்னுடைய சொத்து மதிப்பை 3300 கோடியாக மாற்றினார்.
இதற்கிடையில் ஒரு பெரிய விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து திரும்பி வந்தார். இயக்குனர் ராஜா இயக்கிய தனி ஒருவன் படம் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்தார். சித்தார்த் அபிமன்யுவாக இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கிறார் அரவிந்த்சாமி.