வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நயன் வேண்டாம், நீங்க மட்டும்ன்னா ஓகே.. விக்கிக்கு வாய்ப்பு கொடுக்க போகும் மாஸ் நடிகர்

Vignesh shivan: இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த இரண்டு வருடங்கள் என்பது போறாத காலமாகவே இருந்தது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அஜித்தின் 61 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, பின்னர் அவர் படத்தில் இருந்து விலக்கப்பட்டார்.

முக்கிய நடிகரின் படத்திலிருந்து விலக்கப்பட்டதால் இனி விக்னேஷ் சிவனின் மொத்த கேரியரும் க்ளோஸ் என்று வதந்திகள் பரவத் தொடங்கின. அந்த நேரத்தில் தான் கமல் தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் பண்ண போவதாக அறிவித்திருந்தார்.

Also Read:அஜித்துக்கு போன் போட சொன்ன விஜய்.. அரசியலை ஆட்டம் காண வைக்க போகும் சம்பவம்

சமீபத்தில் பட்ஜெட் காரணமாக கமலஹாசன் அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து ஒதுங்கி விட்டதாக சொல்லப்பட்டது. மத்தளத்திற்கு எல்லா பக்கமும் அடி என்பது போல் விக்னேஷ் சிவனின் நிலைமை ஆகிவிட்டது. இந்த நிலையில் AGS தயாரிப்பு நிறுவனம், விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். விக்கி இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கும் படத்தை AGS தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

வாய்ப்பு கொடுத்த மாஸ் நடிகர்

விக்னேஷ் சிவனுக்கு நல்ல காலம் ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது. என்னை நம்பியவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர் அஜித்குமார். தன்னுடைய 61 வது படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை விலக்கியிருந்தாலும் , தற்போது மற்றொரு படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் கதை இயற்கை விவசாயம் மற்றும் கார்ப்பரேட் சார்ந்தது என சொல்லப்படுகிறது. விடாமுயற்சியை தொடர்ந்து த்ரிஷா தான் இந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். இந்த விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்று இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் கோலிவுட் வட்டாரத்தில் இதைப் பற்றிய சலசலப்பு தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை இயக்கப் போவதாக சொல்லப்பட்டது. தற்போது விக்னேஷ் சிவனின் பெயரும் அடிபடுகிறது. இதில் யார் யாரை முந்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read:அஜித், விக்ரம் தூக்கி எறிந்த 5 படங்கள்.. வம்படியாய் ஐந்தையும் வாங்கி ஜெயித்த ரோலக்ஸ்

Trending News