செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தனுஷுடன் கைகோர்க்கும் மாஸ் நடிகர்.. எக்ஸ் மாமனாருக்கு போட்டியாக மல்டி ஸ்டார்சுடன் களமிறங்கும் படம்

Actor Dhanush: நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் நடிகை பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகர் சிவராஜ்குமார் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த படத்தை தனுஷ் தான் இயக்குகிறார். பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு அவர் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும் பெயரிடப்படாத இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கி விட்டது.

Also Read:மத்த சேனலின் டிஆர்பி-ஐ நொறுக்க கலாநிதி மாறன் போட்ட ஸ்கெட்ச்.. ஜெயிலர் தேதியை லாக் செய்த சன் டிவி

மேலும் தனுஷின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருடைய 51வது படத்தின் அறிவிப்பு வெளியானது. தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை தொடர்ந்து வடசென்னை இரண்டாம் பாகம் அல்லது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தெலுங்கு பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

D 51 என்று அழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் கான்செப்ட் போஸ்டரை பார்க்கும் பொழுது, ஒரு வேலை தாராவி அரசியலை தனுஷ் இந்த படத்தின் மூலம் கையில் எடுத்திருக்கிறார் என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. மேலும் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதேபோன்று இந்த படம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆகும்.

Also Read:ரஜினி நடிக்க மறுத்த படத்தை நடித்துக் காட்டிய ரசிகன்.. உச்சகட்ட குதூகலத்தில் கும்மாளம் போடும் மொத்த டீம்

தனுஷ் ஒரு இந்தி படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். ரஜினிகாந்தின் லால் சலாமை தொடர்ந்து இவர் இந்தியில் மீண்டும் களம் இறங்குகிறார் என அப்போது சொல்லப்பட்டது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினி மல்டிஸ்டார்ஸ் கூட்டணியில் களம் இறங்குவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய 51 வது படத்தில் தனுஷ் ஒரு மாஸ் நடிகருடன் கைகோர்த்து இருக்கிறார்.

தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ஆகவும், என்றும் இளமையுடன் இருக்கும் நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தான் தனுஷ் உடன் கைகோர்க்க இருக்கிறார். நாகார்ஜுனா ஏற்கனவே தமிழில் கார்த்தி உடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் உடன் நடிக்கவிருக்கிறார். இனிவரும் நாட்களில் அவருடைய கேரக்டரை பற்றி தெளிவாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:அதிரடியாக சென்சார் போர்டில் இருந்து வெளிவந்த ஜெயிலர் விமர்சனம்.. ரஜினி-நெல்சன் தல தப்புமா?

Trending News