Actor Rajini and Vijay: தற்போதைய காலத்தின் படி சினிமா பொழுதுபோக்கையும் தாண்டி மக்களிடம் ஈர்க்கப்பட்ட விஷயமாக மாறி உள்ளது. அதாவது முன்னாடியெல்லாம் வருடத்திற்கு மூன்று நான்கு படங்கள் மட்டும் வெளியாகும். அப்படி வரும்பொழுது எப்போது நேரம் கிடைக்குமோ அப்பொழுது அந்த படத்தை பார்த்துவிட்டு வருவார்கள்.
ஆனால் தற்போது வாரத்துக்கு குறைந்தது ஐந்து படங்கள் வெளியாகி மக்கள் அதிகமாக பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் சின்ன பட்ஜெட் படங்களாக யாரும் எடுக்காமல் முன்னணி நடிகர்களை வைத்து அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுத்து வெளியிட விரும்புகிறார்கள். அதற்கு காரணம் அனைத்து பக்கங்களிலும் சினிமாவை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
அத்துடன் ஒரு படத்தை எல்லா மொழிகளிலும் வெளியிட்டால் அது பான் இந்தியா படங்களாக மாறி அதிக லாபத்தை கொடுக்கும் என்பது அவர்களுடைய திட்டமாக இருக்கிறது. அதற்காக மற்ற மொழி நடிகர்களை போட்டு அவர்களுக்கும் அதிகமான சம்பளத்தை கொடுத்து பட்ஜெட் ரீதியாக அதிக செலவு செய்து மிகப்பிரமாண்டமாக எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அப்படி எடுத்தால் கண்டிப்பாக வசூலை அள்ளிவிடலாம் என்று கணக்குப் போட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர், அக்டோபர் மாதம் வெளிவர இருக்கும் லியோ மற்றும் அடுத்த வருடம் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் கங்குவா போன்ற படங்கள் அனைத்திலும் மற்ற மொழி நடிகர்களையும் போட்டு வசூலுக்கு வழி வகுத்து வருகிறார்கள்.
Also read: 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ரஜினியின் மகள்.. கோமாவில் இருந்து வந்த பயில்வான்
அதாவது இவர்களுடைய மிகப்பெரிய பிளான் சின்ன மீனை போட்டு பெரிய மீனுக்கு தூண்டில் போடுவது தான். அதற்காகத்தான் முன்னணி நடிகர்களுக்கு ஏற்ற மாதிரி சம்பளத்தை அதிகரித்து அவர்களை நடிக்க வைத்து 1000 கோடி அளவில் வசூலை பெற வேண்டும் என்பதுதான். ஆனால் என்னதான் ஆசைப்பட்டாலும் இது மிகப்பெரிய பேராசையாக தான் இருக்கும்.
இவர்கள் நினைத்தபடி ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு இவர்கள் படங்களை முதலில் எடுக்க வேண்டும். அதன் பின் குறைந்தது இரண்டு மூன்று பாகங்கள் என தொடர்ந்து படத்தை எடுத்து அதுவும் சூப்பர் ஹிட் ஆக மாற வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே இவர்கள் நினைத்தபடி வசூலை ஈட்ட முடியும். இதைத் தவிர என்னதான் ரஜினி, விஜய்யை வைத்து மாஸ்டர் பிளான் போட்டாலும் இவர்கள் நினைத்தபடி லாபம் கிடைக்காது.