வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டாக்டர் பணியை விட்டுவிட்டு அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர்.. சாய் பல்லவியை போல இருக்கும் மருத்துவர்

சினிமாவை பொறுத்த வரைக்கும் பல நடிகர்கள், சினிமா துறையில் வந்து ஜெயித்தே ஆக வேண்டும் என்று அதற்கான முயற்சியில் மட்டுமே இருப்பார்கள். மேலும் சினிமாவுக்கு, பயிற்சி போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்த நடிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரோ அவர்கள் படித்த படிப்பு அல்லது பார்க்கும் வேலைக்கு சம்பந்தமே இல்லாமல் திடீரென சினிமாவுக்குள் நுழைந்து விடுவார்கள்.

அப்படி நமக்கு பிடித்த நிறைய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படிப்பு மற்றும் அவர்கள் செய்து வந்த வேலைகள் வெளியில் தெரியும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். தமிழ் சினிமாவில் அப்படி நிறைய கலைஞர்கள் வேறொரு துறையில் இருந்து வந்து படங்களில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். பெரும்பாலும் இது போன்றவர்கள் தயாரிப்பு துறையில் நாட்டம் செலுத்தும் பொழுது, ஒரு சிலரே தைரியமாக நடிப்பு துறையில் காலடி வைக்கிறார்கள்.

Also Read:அஜித்தை விட டபுள் மடங்கு பாய்ந்து வரும் விஜய்.. தளபதி 68 படத்தின் டைட்டில் இதுதானா

இதுபோன்று சினிமா ரசிகர்களே மிகப்பெரிய ஆச்சரியத்திற்குள் தள்ளியவர் தான் நடிகை சாய் பல்லவி. பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சாய் பல்லவி, உண்மையில் ஒரு மருத்துவர். மருத்துவராக இருந்து கொண்டு நடனத்திலும், நடிப்பிலும் சிறந்து விளங்கிய இவர், தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது மற்றொரு நடிகரும் சேர்ந்து இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமலஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் போலீஸ் ஆக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பரத் ரெட்டி தான் அந்த நடிகர். இவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதய மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.

Also Read:டாக்டர் படிப்பை படித்த 5 நடிகைகள்.. என்ன படித்தோம் என்பதை மறந்து விட்டு ஆட்டம் போடும் சாய் பல்லவி

நடிகர் அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடித்த விசுவாசம் திரைப்படத்தில் வில்லனின் மகளுக்கு விளையாட்டு சொல்லித் தரும் கோச்சாக இவர் நடித்திருப்பார். அதேபோன்று இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் பரத் ரெட்டி. முதலில் தெலுங்கில் அறிமுகமாகிய இவர், தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

மருத்துவத்திலும் சிறந்தவராக இருந்து கொண்டு நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகர் பரத் ரெட்டி. இவரைப் போன்றே தமிழ் சினிமாவில் நிறைய பேர் யாரும் எதிர்பார்க்காத தொழிலை செய்தவர்களாக இருக்கிறார்கள். பட வாய்ப்பு கிடைக்காமல் வேறு ஒரு பாதைக்கு செல்லும் நடிகர்கள் இருப்பது போல், வேறு ஒரு துறையில் இருந்து வந்து நடிப்பில் காலடி வைத்து ஜெயிப்பவர்களும் இருக்கிறார்கள்.

Also Read:சமந்தா முதல் சாய் பல்லவி வரை.. டாப் ஹீரோயின்கள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

Trending News