திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மன ரீதியாக உடைந்து போன நடிகை.. உச்சகட்ட விரக்தியில் வாரிசு பட ஹீரோயின்

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படம் குடும்ப செண்டிமெண்ட் என்பதால் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இதில் நடித்திருந்தனர். வாரிசு பட ஹீரோயின் தற்போது உச்சகட்ட விரக்தியில் உள்ளார்.

கன்னட மொழி படங்களில் மூலம் அறிமுகமான ராஷ்மிகா தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. விஜய்யுடன் அவர் நீண்ட காலமாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வாரிசு படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது.

Also Read : 23 வருட திருமண வாழ்க்கையை முடித்து வைத்த நடிகை.. வாரிசு நடிகையின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஜய்

இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாக ராஷ்மிகாவுக்கு எதிராக இணையத்தில் தொடர்ந்து அவ்வப்போது ஏதாவது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் அவருக்கு சொந்த மொழியிலேயே ஏகப்பட்ட பிரச்சனைகள் வரத் தொடங்கியது. அடுத்தடுத்து ராஷ்மிகாவை டார்கெட் செய்யும் விதமாக ட்ரோல்கள் வெளியானது.

இது குறித்து ரஷ்மிகா சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது உடற்பயிற்சி செய்தால் பையன் மாதிரி தோற்றமளிப்பதாக கூறுகிறார்கள், இல்லையென்றால் குண்டாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்று சொல்கிறார்கள். இப்படி எது செய்தாலும் குத்தம் கண்டுபிடிக்கிறார்கள்.

Also Read : அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.. விஜய்யை குத்திக் காட்டிய எஸ் ஏ சந்திரசேகர்

ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்ட விலக வேண்டும் என்று நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை. மேலும் என்னிடம் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை. உங்களுடைய வார்த்தைகளால் நான் மிகவும் மன ரீதியாக புண்பட்டு உள்ளதாக மிகுந்த வேதனையுடன் ராஷ்மிகா கூறியுள்ளார்.

இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ரஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதைக் கெடுப்பதற்காக சிலர் சூழ்ச்சி செய்து பொய்யான தகவல்களை பரப்புவதாக கூறப்படுகிறது. இதுபோல கமெண்ட்களால் ராஷ்மிகா மிகுந்த மன கஷ்டத்தில் தன் மனதில் உள்ள விஷயங்களை ரசிகர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

Also Read : சமந்தாவின் ஒரே பாட்டுதான்.. புஷ்பாவில் காணாமல்போன ரஷ்மிகா மந்தனா

Trending News