வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிகிச்சையில் நடந்த மிகப்பெரிய தவறு.. விஜயகாந்த் உடல்நிலை மோசமானதற்கு முக்கிய காரணம்

Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிய மரணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு நல்ல நடிகர், கலியுக கர்ணனாக வாழ்ந்தவர் திடீரென மறைந்தது தான் இதற்கு காரணம். கொரோனா, நிமோனியா போன்ற வியாதிகள் அவருடைய மரணத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே பிரபலமாக இருந்த ஒரு மனிதர் எட்டு வருடங்களாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியாமல் போனதற்கான முக்கிய காரணம் வெளியாகி இருக்கிறது.

மேடை ஏறி சிங்கமாக கர்ஜித்து கொண்டிருந்த விஜயகாந்த் பேச்சில் திடீரென தடுமாற்றம், மேடையில் உட்கார்ந்து இருக்கும்போது திடீரென அழுவது, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவது என அவருடைய நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. அப்போது அந்த வீடியோக்கள் எல்லாம் நகைச்சுவையாக ட்ரோல் செய்யப்பட்டது. அவருடைய மரணத்திற்குப் பிறகு இந்த வீடியோவை பார்க்கும் பொழுது உண்மையிலேயே அவருக்கு உடலளவில் பிரச்சனை இருந்திருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

பல மேடைகளில் விஜயகாந்த் நிலை தடுமாறிக் கொண்டிருந்தபோதே சிங்கப்பூரில் சிகிச்சைக்காக சென்று வந்தார். அதன் பின்னர் விஜயகாந்த் எந்த ஒரு அரசியல் மேடைக்கும் வரவில்லை. உண்மையை சொல்லப் போனால் கடந்த எட்டு வருடங்களாக விஜயகாந்தின் முகத்தை யாருமே பார்க்கவில்லை. அவர் இறக்கும் வரையிலும், இறந்த பின்னும் கூட அவர் முகத்தில் அணிந்திருந்த மாஸ்கை கழட்டவே இல்லை.

Also Read:விஜயகாந்த் பாணியை பின்பற்ற போகும் அருண் விஜய்.. கேப்டன் சமாதியில் எடுத்த தில்லானா சபதம்

விஜயகாந்தை பற்றி நிறைய பிரபலங்கள் தற்போது பேசி வந்தாலும், அவருடைய வீட்டில் டிரைவராக பணி புரிந்தவர், அவருக்கு நெருக்கமாக நிறைய வருடங்கள் இருந்தவர் சொன்ன விஷயம் தான் இப்போது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. மக்கள் போற்றும் மாமன்னனாக இருந்த விஜயகாந்துக்கு கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் அவரை எட்டு வருட காலம் வீட்டிலேயே முடக்கி இருக்கிறது.

சிகிச்சையில் நடந்த மிகப்பெரிய தவறு

விஜயகாந்திற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்த போது, சென்னையில் அது நடந்தால் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மருத்துவமனை முன்பு கூடி விடுவார்கள் என நினைத்து அவருடைய குடும்பம் அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போதே ரத்தம் மூளை நரம்புக்குள் தவறுதலாக சென்று விட்டதாம்.

இதை மருத்துவமனையிலேயே அவருடைய குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டார்களாம். அந்த மூளை நரம்பிற்குள் ரத்தம் சென்றதால் தான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை சரியில்லாமல் ஆகியிருக்கிறார். கிட்டத்தட்ட உடலின் சமநிலை செயலிழக்கப்பட்டு தான் பேச்சு, நடப்பது எல்லாமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டிற்குள்ளேயே வைத்து பராமரிக்கப்பட்டு கொண்டிருந்த விஜயகாந்த்துக்கு ஒவ்வொரு நோயாக வர ஆரம்பித்து இறுதியில் அது மரணத்தை எட்டி இருக்கிறது.

Also Read:விஜயகாந்த்துக்கும், வடிவேலுக்கும் இதுதான் வித்தியாசம்.. தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த மாமன்னன்

 

Trending News