புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்தை.. மாமன்னன் ரத்னவேலுவை துரத்தும் அடுத்தடுத்த வாய்ப்புகள்

Fahadh Fazil Lineup Movies: வேலைக்காரன், விக்ரம் என படத்துக்கு படம் வெரைட்டி காட்டி வந்த பகத் பாசிலுக்கு மாமன்னன் ரத்தினவேலு கதாபாத்திரம் மிகப் பெரும் பப்ளிசிட்டியை கொடுத்தது. படம் வெளிவந்த சமயத்தில் அவருடைய வீடியோவை ட்விட்டரில் போட்டு ரசிகர்கள் செய்த அலப்பரையை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

அதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அதை அடுத்து இரு பெரும் நடிப்பு அரக்கர்களுடன் மூன்றாவதாக இந்த நடிப்பு ராட்சசனும் இணைந்திருக்கிறார்.

அதாவது தங்கலான் மூலம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க வரும் விக்ரம் தற்போது தன்னுடைய 62 ஆவது படத்தில் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் இப்படம் பற்றிய அறிவிப்பு ஒரு வீடியோ மூலம் வெளிவந்திருந்தது.

Also read: விஜய் கைவிட்டதால் விக்ரமிடம் சரணடைந்த இயக்குனர்.. சியான் வெற்றி படத்தின் பார்ட் 2

அதை அடுத்து எஸ் ஜே சூர்யா இதில் நடிக்க இருக்கும் செய்தியும் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இந்த சூழலில் பகத் பாசிலும் இந்த கூட்டணியில் ஒருவராக இணைந்திருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இப்படம் மட்டுமல்லாமல் அவருடைய கைவசம் புஷ்பா 2, மாரீசன் உள்ளிட்ட பல படங்கள் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்னொரு தமிழ் படத்திலும் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதாம். மேலும் தெலுங்கிலும் இவருக்கு அதிக மவுசு இருக்கிறது. இப்படி ரத்னா வேலுவை விடாமல் அடுத்தடுத்த வாய்ப்புகள் துரத்திக் கொண்டிருக்கின்றன.

Also read: விக்ரமை கண்டாலே தெறித்து ஓடும் முதலாளிகள்.. எல்லா பக்கமும் அடித்து விரட்டும் கெட்டநேரம்

Trending News