வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிளாப் ஆகி இருக்க வேண்டிய அரவிந்த் சாமி படம்.. கிளைமேக்சில் மாற்றப்பட்ட டிவிஸ்ட்டால் 175 நாட்கள் கடந்து சாதனை

Actor Arvind Samy: ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு படத்தின் கிளைமாக்ஸ் ரொம்பவே முக்கியம். படம் முழுக்க ரசிக்கும்படி இருந்தாலும் கிளைமாக்ஸ் சொதப்பி விட்டால் ரசிகர்கள் அந்த படத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ரசிகர்களின் மனதிற்கு ஏற்ப கிளைமாக்ஸ் வைப்பது என்பதும் ரொம்பவே கஷ்டம். நிறைய படங்கள் பிளாப் ஆவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அப்படித்தான் அரவிந்த்சாமி நடித்த படத்தின் கிளைமாக்ஸ் பிடிக்காததால் ரிலீஸ் ஆகி ஒரு வாரங்களுக்கு மேல் அந்தப் படத்தை கண்டு கொள்ளவே ஆள் இல்லையாம். படம் கிட்டத்தட்ட பிளாப் என்று பட குழுவினரும் முடிவு செய்து விட்டார்களாம். பின்னர் படத்தின் கிளைமாக்ஸ் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என பலரும் சொல்வதைக் கேட்டு, இயக்குனரும் முடிவை மாற்றிய பிறகு படம் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது.

Also Read:ஒரே படத்தில் ஒட்டுமொத்த சினிமாவை புரட்டி போட்ட நடிகை.. அரவிந்த் சாமியே உருகி உருகி காதலித்த காந்த கண்ணழகி

திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்த ராஜிவ் மேனன் இயக்குனராக அறிமுகமான மின்சார கனவு படம் தான் அது. பாலிவுட் நடிகை கஜோல், பிரபு தேவா, அரவிந்த்சாமி ஆகியோரது நடிப்பில் இந்த படம் 1997 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.

சிறுவயதிலிருந்தே கன்னியாஸ்திரிகளால் வளர்க்கப்பட்டு கிறிஸ்துவ பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த ஹீரோயினுக்கு தானும் ஒரு கன்னியாஸ்திரியாக ஆக வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய லட்சியம். வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் பால்ய கால நண்பனாக அரவிந்த்சாமி நடித்திருப்பார் கஜோலின் கன்னியாஸ்திரி கனவை எப்படியாவது நிறுத்தி அவரை காதலிக்க வேண்டும் ,திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருக்கும்.

Also Read:ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு பெண் வேடத்தில் நடித்த 5 நடிகர்கள்.. ஜெமினியை காதலிக்க தூண்டிய சண்முகி

இதற்காக பிரபுதேவாவின் உதவியை நாடும் பொழுது தான் இது முக்கோண காதல் கதையாக மாறிவிடும். அரவிந்த்சாமி ஒரு பக்கம் கஜோலை உருகி உருகி காதலிக்க, மற்றொரு பக்கம் பிரபுதேவா மற்றும் கஜோலுக்கு இடையே காதல் உருவாகிவிடும். இந்த படத்தின் முதல் கிளைமாக்ஸ் இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு கஜோல் கன்னியாஸ்திரி ஆக மாறுவது போல் முடிக்கப்பட்டு இருக்கும்.

இந்த கிளைமாக்ஸ் சீனை ரசிகர்கள் விரும்பவில்லை. மேலும் மதம் சார்ந்த அழுத்தமும் இருந்து வந்தது. படம் ரிலீஸ் ஆகி ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகு கிளைமாக்ஸ்ஸில் கஜோல் மற்றும் பிரபுதேவா இருவரும் திருமணம் செய்து கொள்வது போலவும், அரவிந்த்சாமி பாதிரியார் ஆகிவிடுவது போலவும் மாற்றியிருந்தார்கள். அதன் பின்னர் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 175 நாட்கள் திரையில் ஓடி சாதனை படைத்தது.

Also Read:சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

Trending News