ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

ஓடிடி ரிலீஸ் பற்றி யோசிக்கவே நேரமில்லை.. தியேட்டரிலேயே கோடிக்கணக்கில் கல்லா கட்டும் படம்

OTT Release: இப்போதெல்லாம் ஒரு படத்தின் வியாபாரம் என்பது அதன் ஓடிடி ரிலீஸ் உரிமைத்தையும் சேர்த்து தான் கணக்கிடப்படுகிறது. பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகி 28 நாட்களுக்குள் இது போன்ற தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படத்தின் படக்குழுவினர் இன்றுவரை ஓடிடி ரிலீஸ் பற்றி எதுவும் பேசாமல் கப்சிப்பென்று இருக்கிறார்கள்.

ஓடிடி ரிலீஸ் பற்றி யோசிக்கக்கூட அந்த பட குழுவிற்கு நேரமில்லாத அளவிற்கு படத்தின் வசூல் தியேட்டர் ரிலீசில் குவிந்து கொண்டிருக்கிறது. இன்று வரை இந்த படத்தை ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்க்கின்றனர். எனவே இந்த லாபத்தை கைவிட்டு விடக்கூடாது என்று மாஸ்டர் பிளான் போட்டு ஓடிடி பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் படத்தை தியேட்டரில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read:சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தின் நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த போர் தொழில் திரைப்படம் தான் தியேட்டரில் தற்போது வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பது. இந்த படம் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை நெருங்கும் நிலையிலும் படம் என்னும் ஓடிடி ரிலீஸ் ஆகவில்லை.

போர் தொழில் படத்தின் மொத்த பட்ஜெட் 6 கோடி ஆகும். முதல் நாள் ரிலீசில் இந்த படம் 85 லட்சம் வசூலித்தது. நடிகர் சித்தார்த்தின் டக்கர் திரைப்படத்தோடு மோதிய இந்த படம், ரிலீஸ் ஆகி சிறிது நாட்களில் பாசிட்டிவ் விமர்சனங்களால் மக்களிடையே அதிக ரீச் ஆனது. இதுவரை 30 கோடி லாபம் பார்த்து இருக்கிறது.

Also Read:15 வினாடியில் தீர்ந்து போன இலவசம்.. மோசடி கும்பலுக்கே டஃப் கொடுக்கும் சன் பிக்சர்ஸ், கூட்டு சேர்ந்த நெல்சன்

சமீபத்தில் இந்த படத்தை சோனி நிறுவனம் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தியேட்டரில் கல்லா கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, ஏன் சீக்கிரம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று யோசித்த தயாரிப்பு நிறுவனம், சோனி நிறுவனத்திடம் பேசி ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க சொல்லி இருக்கிறார்கள். அந்த நிறுவனமும் இவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

30 கோடி லாபத்தை பார்த்த போர் தொழில் திரைப்படம் இன்னும் ஐந்து கோடி வரை கலெக்சன் செய்யும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த மாதம் முழுவதும் தியேட்டரில் படத்தை ஓட விடுவதாக தயாரிப்பு நிறுவனம் பிளான் பண்ணி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:மொத்த நெருப்பையும் பற்ற வைத்த சரத்குமார்.. செகண்ட் இன்னிங்ஸில் சகுனியாய் மாறிய சுப்ரீம் ஸ்டார்

Trending News