வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளதால், எங்கு பார்த்தாலும் மழை பற்றிய பேச்சாகத் தான் உள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகமே பரபரப்பாக காட்சியளிக்கிறது.
திடீர் திடீர்னு உடையுதாம் சாயுதாம் என்று வடிவேலு சொல்வதை போல, பல இடங்களில் மின் கம்பிகள், மரங்கள் என சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியில் சென்றாலே, அந்நியன் படத்தில் வரும் தாரீ றாரோ பிஜிஎம் தான் மண்டைக்குள் ஓடுகிறது.
இப்படி இருக்க, மழைக்கு இதமாக அல்லாமல் ஒரு change-க்கு நெஞ்சை திடமா வைத்துக்கொண்டு நீங்கள் கண்டிப்பாக ஒரு படம் பார்க்க வேண்டும். ஆம் மிஸ் செய்துவிட்டீர்கள் என்றால், இந்த feel மறுபடியும், அடுத்த மழை சீசனில் தான் வரும்.
நெஞ்சை பதற வைக்கும் அந்த படம்..
நீங்கள் இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், மலையாளத்தில் வெளியான 2018 படம் தான். சுமார் 10 நாட்களுக்கு மேலான தீவிர மழையால் மாநிலத்தின் அனைத்து அணைகளும் நிரம்பின. ஒரு பக்கம் மழை பொழிந்துகொண்டே இருக்க, ஒரு பக்கம் நிரம்பிய அனைத்து அணைகளும் திறக்கப்பட்டன.
அப்போது, மொத்த கேரளமும் வெள்ளத்தில் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் தண்ணீர், மரண ஓலம் என கேரளம் மொத்தமும் கண்ணீர் வெள்ளத்தில் காட்சியளித்தது. மொத்தம் உள்ள 12 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இருந்தன.
அந்த நிலையில் இருந்து கேரளம் எப்படி மீண்டு வந்தது. மக்கள் பட்ட பாடும் இழப்புகளும் என்ன என்பதை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள். படம் பார்த்து கண்ணீர் சிந்தாதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த மழைக்கு SonyLiv OTT தளத்தில் பார்த்தாள் கண்டிப்பா வேற லெவல் Feel இருக்கும்.