சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் நடிகைகள் சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று இயக்குனர்கள் முதல் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். அதில் சில நடிகைகள் திறமையால் முன்னேறினாலும் பலர் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சம்மதிக்கின்றனர்.
இதுதான் இன்றைய சினிமாவில் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் பட வாய்ப்புக்காக தானே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முன் வந்த கதையும் இருக்கிறது.
ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக தலைகாட்டி வந்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிப்போனார். ஆனால் ஆரம்ப காலத்தில் அவர் பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக தானே வலிய சென்று இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சம்மதம் என்று சிக்னல் கொடுப்பாராம்.
எப்படி என்றால் யாராவது ஒரு பிரபலம் இவரிடம் மரியாதை நிமித்தமாக பேச வந்தால் அவர்களுக்கு கை கொடுப்பது போல் உள்ளங்கையை சுரண்டுவாராம். இதன் மூலம் நடிகை பட வாய்ப்பு எதிர்பார்க்கிறார் என்றும் அதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சம்மதிக்கிறார் என்றும் அந்த பிரபலங்கள் புரிந்து கொள்வார்களாம்.
Also read:உத்தமன் வேஷம் போடும் இயக்குனர்.. மாற்றுத்திறனாளி நடிகையிடம் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்
அதில் சிலர் அதை ஏற்றுக் கொண்டு நடிகைக்கு வாய்ப்புகளை வாரி வழங்கி இருக்கின்றனர். ஆனால் திறமைக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கும் பிரபலங்களிடமும் நடிகை இதேபோன்று சிக்னல் கொடுத்திருக்கிறார். அவர்கள் நடிகையை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்களாம்.
அதன் பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடித்து முன்னணி நடிகையாக மாறிய அந்த நடிகை ஒரு இயக்குனரின் படத்தில் மட்டும் அதிகமாக நடிக்க ஆரம்பித்தார். இதனால் அவர்களுக்கிடையே ஒரு நெருக்கம் இருப்பதாக கூட அந்த கால பத்திரிகைகளில் வெளிவந்தது. ஆரம்பத்தில் இப்படி பட வாய்ப்புகளை பெற்ற அந்த நடிகை பிறகு அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நம்பர் ஒன் நடிகையாக மாறிப் போனார்.
Also read:காமெடி நடிகர் முகத்தில் சிகரட்டை ஊதிய சைக்கோ நடிகை.. கழுத்தைப் பிடித்து தள்ளிய இயக்குனர்