Actor Vishaal: நடிகர் விஷாலை சுற்றி எப்பொழுதுமே சர்ச்சைகளுக்கும், புகார்களுக்கும் பஞ்சம் இருக்காது. அவர் எது பேசினாலும் அது கடைசியில் பஞ்சாயத்தில் தான் வந்து முடியும். அதற்கு ஏற்றது போல் தான் அவருடைய நடவடிக்கையும் இருக்கும். சமீபத்தில் விஷால் மற்றும் ஒரு விவாகரத்தில் சிக்கி இருக்கிறார். இது போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் அளவுக்கு மிகப்பெரிய பஞ்சாயத்தாக மாறி இருக்கிறது.
இதுவரை சினிமா நடிகைகளுடன் மட்டுமே கிசுகிசுக்கப்பட்டு வந்தார் நடிகர் விஷால். தற்போது வீட்டிற்கு அருகிலேயே இது போன்ற ஒரு சம்பவம் நடந்து, அவர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த விஷயத்திற்கு விஷால் தரப்பிலிருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.
நடிகர் விஷால் தினம் தோறும் பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதித்து செல்வதாகவும், திரும்பி மூன்று மணி நேரம் கழித்து வீட்டிற்கு திரும்புவதாகவும், மேலும் அந்தப் பக்கத்து வீட்டில் 16 வயது பெண் ஒருவரும் இருப்பதாகவும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த புகாரை அளித்திருப்பவர் அதே ஏரியாவை சேர்ந்த மற்றொரு பெண் தானாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் விஷாலை அழைத்து விசாரிக்காமல், அந்தப் பெண்ணை தான் பயங்கரமாக திட்டி அனுப்பி இருக்கிறார்கள். விஷால் அப்படி சென்று வந்தால் சம்பந்தப்பட்ட பெண் தான் புகார் கொடுக்க வேண்டுமே தவிர, நீங்கள் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டார்களாம்.
விஷால் மீது புகார் அளித்திருப்பது உண்மை அல்லது பொய்யாக இருந்தாலும், புகார் கொடுத்த அந்த பெண்ணின் மீது தான் தவறு இருக்கிறது. அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்த்து அதை போலீஸ் ஸ்டேஷனில் வந்து புகார் கொடுப்பது அவருடைய வேலை இல்லை என்று சொல்லி போலீசார் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நடிகர் விஷாலுக்கு இதுபோன்ற சர்ச்சைகள் ஒன்றும் புதிது கிடையாது. நடிகை ஸ்ரீ ரெட்டி கூட விஷால் தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். இந்த புகார் உண்மையாக இருந்தால், இந்தப் பெண் 16 வயது உடையவர் என்பதால் ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது அவருடைய வீட்டாரோ புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் அதிகம்.
Also Read:சிலுக்கின் காதல் வலையில் சிக்கிய 4 பிரபலங்கள்.. தாடிக்காரரால் மரணத்தை தழுவிய சோகம்