சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முன்னணி நடிகர்களால் நடுத்தெருவுக்கு வரும் முதலாளிகள்.. உஷாரா முழிச்சிக்கோங்க சினிமா துறைக்கு ஆப்பு

கடந்த ஒரு சில வருடங்களாகவே அவ்வபோது கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக திரையரங்குகள் மூடப்படுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் பண்டிகை கால விடுமுறைகளை குறிவைத்து டாப் ஹீரோக்களின் படங்களும் ஓடிடியில் ரிலீசாகி, ஓடிடியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

அதன் பிறகு திரையரங்குகளை எப்பொழுது திறக்குவார்கள் மூடுவார்கள் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இனிமேல் ஓடிடியிலேயே படங்களை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு சினிமா தயாரிப்பாளர்கள் வந்துவிட்டனர்.

இதன் விளைவாக தற்போது முன்னணி நடிகர்கள் இன்னும் கொஞ்ச நாளிலேயே அவர்களுக்கு என்றே தனித்தனியாக ஓடிடி தளத்தை உருவாக்கி அதிலேயே தங்களுடைய படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டம் தீட்டுகின்றனர். ஏற்கனவே தெலுங்கு பிரபலம் அல்லு அர்ஜுன் தனக்கென்று ‘AHA OTT’ என்ற ஓடிடி தளத்தை உருவாக்கி அதன் ப்ரமோஷன் வேலையை பக்காவாக பார்த்து வருகிறார்.

இதற்காக புரமோஷனுக்காகவே அடுத்த வாரத்தில் அல்லு அர்ஜுன் சென்னைக்கு வரவுள்ளார். இப்படி சினிமா நடிகர் நடிகைகள் ஓடிடியின் வளர்ச்சியாலும், அதற்கு மக்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக இப்படிப்பட்ட புது முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். அத்துடன் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு யார் ஆர்டிஸ்ட், டைரக்டர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் பெரிதல்ல.

படத்தில் கண்டெண்ட் இருக்கிறதா என்பது மட்டுமே பெரிதாக பார்க்கப்படும் என ஒடிடி நிறுவனத்தினர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றனர். இதனால் புதிய நடிகர் நடிகைகள் சினிமாவில் வருவதற்கும், ஏற்கனவே பல ஆண்டுகளாக சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு நடிகர்களை வைத்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களை ஓரங்கட்டும் வளர்ச்சியை சினிமா ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

ஆகையால் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு பிரச்சனை இல்லாமல் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சம்பளம் சரியாக கொடுத்து பிறகு படத்தை ஓடிடியில் வெளியிட்டால் சென்சாருக்கு தனியாக தொகை ஒதுக்கணும் என்கின்ற அவசியமும் இருக்காது என்றும் பிரபலங்கள் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.

இப்படி முன்னணி நடிகர்கள் ஓடிடி தளத்தை திறந்துவிட்டால் தியேட்டர் முதலாளிகள் நடுத்தெருவுக்கு வர வேண்டிய தான்.  விரைவாக தமிழ் சினிமா இதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்பதே கோலிவுட் வட்டாரத்தில் கோரிக்கையாக இருக்கிறது. பிரபல ஓடிடி தளங்களால் சமூக சீர்கேடு ஏற்பட்டு தான் வருகிறது, ஏனென்றால் அங்கு சென்சார் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை என்பதால் தான்.

Trending News