புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மாஸ்டர் படத்திலிருந்து விஜய்க்கு வந்த புதுப்பழக்கம் .. மன்சூர் அலிகான் கூட இருந்தால் கேட்கவா வேணும்

Actor Vijay: பொதுவாக விஜய்யுடன் நடித்த பல பிரபலங்களும் இவரைப் பற்றி சொல்லும் வார்த்தை ரொம்ப அமைதி, இவரிடம் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அதற்கு மட்டும் பதில் அளிப்பார். அத்துடன் இவருடைய கேரக்டர் கூச்ச சுபாவம் என்று தான் நிறைய பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம்.

ஆனால் தற்போது இவர் அப்படி இல்லாமல் சற்று மாறுபட்ட கேரக்டரில் உலா வருகிறார். அதாவது விஜய் இப்பொழுதெல்லாம் ரொம்பவே கலகலப்பாக மாறிக்கொண்டே வருகிறாராம். எப்படி என்றால் சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டு அவர்களை நக்கல் அடிப்பதே வேலையாக வைத்துக் கொள்கிறார்.

Also read: லியோ ஃப்ளாஷ் பேக் காட்சியில் ஏற்பட்ட ட்விஸ்ட்.. புது என்ட்ரி கொடுக்கும் பிரேமம் நடிகையின் போட்டோ

அடுத்து சூட்டிங் முடிந்த கையோடு கேரவன் போவதற்கு முன்பு குறைந்தது ஒரு மணி நேரமாவது இவருடன் நடிப்பவர்களுடனும், படக்குழுவில் வேலை பார்ப்பவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து விட்டு தான் அந்த இடத்தை விட்டு கிளம்புவாராம். அது மட்டுமில்லாமல் இவர் கூட வேலை பார்த்தவர்களின் பெர்பார்மன்ஸ் பற்றி பேசி அதிகமாக புகழாரம் செய்து வருகிறார்.

இது இவரிடம் சமீப காலமாக ஒட்டிக்கொண்ட புதுப்பழக்கமாக இருக்கிறது. இதனால் விஜய்யுடன் நடிப்பவர்கள் பலரும் இதைப் பற்றி பேசி சந்தோஷப்பட்டு வருகிறார்கள். இந்த பழக்கமெல்லாம் மாஸ்டர் படத்தில் நடித்த பின்பே இவரிடம் ஒட்டிக்கொண்டது. அதன் பிறகு தான் இவ்வளவு பெரிய மாற்றம் இவருடைய கேரக்டரில் இருக்கிறது என்று இவருடன் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

Also read: விஜய்யிடம் காரை பரிசாக வாங்கிய 4 பிரபலங்கள்.. ஓடாத படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையா தளபதி

இதுல வேறு தற்போது மன்சூர் அலிகான் கூட சேர்ந்திருக்கிறார். இன்னும் கூடுதலாகவே இவருடன் சேர்ந்து கொண்டு மற்ற அனைவரையும் சூட்டிங் ஸ்பாட்டில் செம கலாய் கலாய்த்து வருகிறார். மேலும் மன்சூர் அலிகான் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரையும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார்.

அப்பொழுது இவருடைய இரண்டு பசங்களுடன் விஜய் ஜாலியாக அரட்டை அடித்து இருக்கிறார்.
இதெல்லாம் பார்ப்பதற்கு ரொம்பவே வியப்பாகவும் இருக்கிறது. மேலும் அவருடன் வேலை பார்ப்பது ரிலாக்ஸ் ஆக இருக்கிறது என்று இவரைப் பற்றி அனைவரும் ரொம்பவே நல்ல விதமாக பேசி விஜய்க்கு ரொம்பவே பெருமை சேர்த்து வருகிறார்கள்.

Also read: விஜய்யை காக்க வைத்த நகைச்சுவை நடிகர்.. அலட்சியம், ஈகோவால் சரிந்த மார்க்கெட்

Trending News