புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மாஸ் லுக்கில் தளபதி.. வைரலாகும் லியோ புதிய போஸ்டர்

Leo Poster: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த வருடம் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த மூன்று படங்கள் ஜெயிலர், ஜவான் மற்றும் லியோ. இதில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் ஷாருக்கானின் ஜவான் படங்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் லியோ படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு லியோ படம் வெளியாக உள்ள நிலையில் இப்போது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படக்குழு சில வேலைகளை செய்து வருகிறது. அந்த வகையில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனின் அறிமுக வீடியோவை வெளியிட்டது.

Also Read : லியோ படத்துக்கு வச்ச பெரிய ஆப்பு.. வசூலை தடுக்க நாலா பக்கமும் நடக்கும் சதி

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. ஏனென்றால் ஜெயிலர் விழாவில் ரஜினி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் படியாக விஜய் குட்டி ஸ்டோரி சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் விஜய் அரசியல் வருகைக்கான விஷயங்களையும் கூற உள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் இந்த நாளுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் லியோ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த போஸ்டர் தெலுங்கு ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டு இருக்கின்றனர்.

Also Read : லியோ சென்சாரில் தப்பித்தாலும் அவன்ட உங்க பருப்பு வேகாது.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட லோகேஷ்

காஷ்மீர் பனி பிரதேசத்தில் செம கூலாக இருக்கும் விஜய் மற்றும் அதிரடியான வேகத்துடன் ஓடிவரும் தளபதியின் மற்றொரு புகைப்படம் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது லியோ படத்தின் இந்த போஸ்டர் தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் தனது சமூக வலைதள பக்கத்திலும் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

வைரலாகும் லியோ புதிய போஸ்டர்

leo-poster
leo-poster

Trending News