திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

மிரட்ட வரும் அஜித்-சஞ்சய் தத் காம்போ.. வைரலாகும் புது போஸ்டர், கிழிய போகும் ஸ்கிரீன்

Actor Ajith: பைக்கிலேயே உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அஜித் விடாமுயற்சிக்காக மேக்கப் போட தயாராகி விட்டார். பல மாதங்களாக புலி வருது புலி வருதுன்னு பூச்சாண்டி காட்டி வந்த படகுழு இப்போது ஷூட்டிங்கை ஜோராக ஆரம்பிக்க இருக்கின்றனர்.

அதன்படி இந்த மாத இறுதி அல்லது அக்டோபர் மாத முதல் வாரத்தில் விடாமுயற்சியின் படப்பிடிப்பது துபாயில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் அஜித்துக்காக அட்டகாசமான ஒரு போஸ்டரை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.

Also read: அஜித் வீட்டு சிசிடிவி கேமராவில் முகத்தை காட்டினேன்.. உதவி கிடைக்காமல் அல்லாடும் நடிகர்

இது வழக்கமாக நடப்பது தான் என்றாலும் தற்போது வெளியாகி உள்ள அந்த போஸ்டர் வெறித்தனமாக இருக்கிறது. அதாவது அஜித்துக்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத் கமிட்டாகி இருக்கிறார் என்ற செய்தி தான் இப்போது மீடியாவில் களை கட்டிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருக்கும் இவர் அஜித்துடன் இணைந்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவும் வைரலாகி வருகிறது.

Also read: அட நம்புங்கப்பா உண்மை தான்.. விடாமுயற்சி ஷூட்டிங் எங்க, எப்ப ஆரம்பிக்குது தெரியுமா?

இதுவே எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் அந்த போஸ்டரில் அஜித் மற்றும் சஞ்சய் தத் இருவரின் தோற்றமும் மிரட்டலாக இருக்கிறது. அதிலும் அவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்கும் படியும், சஞ்சய் தத் வாயில் சிகரெட்டோடு வில்லத்தனத்தின் மொத்த உருவமாக இருப்பது போலவும் உள்ளது.

அவருக்கு அருகில் இரண்டு காபி கப் இருக்கிறது. அதில் தேள் மற்றும் சிங்கத்தின் உருவம் இடம்பெற்று இருக்கிறது. இது லியோ மற்றும் ரோலக்ஸை குறிப்பதாக தெரிகிறது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த போஸ்டர் வரவேற்பையும் பெற்று வருகிறது. ஆக மொத்தம் அஜித், சஞ்சய் தத் கூட்டணி வெறித்தனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தியேட்டர் ஸ்கிரீன் கிழியும் அளவுக்கு ரகளையாகவும் உள்ளது.

மிரட்ட வரும் அஜித்-சஞ்சய் தத் காம்போ

ajith-sanjay dutt
ajith-sanjay dutt

Trending News