எழில் செய்த காரியத்தால் புதுசாக வந்த பிரச்சனை.. கோபி ஈஸ்வரியை உதாசீனப்படுத்திய பாக்யாவின் குடும்பம்

bhakkiyalakshmi (38)
bhakkiyalakshmi (38)

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எழில் மற்றும் இனியா பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆகாஷுக்கு இன்னைக்கு எக்ஸாம் என்ற நியாபகம் இனியாவிற்கு வந்துவிட்டது. உடனே ஆகாஷுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட இனியா, எழிலிடம் போன் கேட்கிறார். எழில் ஆரம்பத்தில் கொடுக்க யோசித்த நிலையில் இனிய வேண்டாம் என்று சொல்லி கடவுளிடம் ஆகாஷ் நல்லபடியாக எக்ஸாம் எழுத வேண்டும் என்று வேண்டி விட்டு மாடிக்கு போகிறார்.

அப்பொழுது எழில், இனியவை கூப்பிட்டு என்கூட வெளியே வா என்று கூட்டிட்டு போகிறார். அப்படி போகும் இடம் தான் செல்வியின் வீடு. உடனே இனியா ஏன் இங்கே கூட்டிட்டு வந்தாய் என்று கேட்ட பொழுது ஆகாஷே நேரடியாக பார்த்து வாழ்த்து சொல்லு என்று உள்ளே கூட்டிட்டு போய் ஆகாஷ் இடம் பேச வைக்கிறார். இனியாவும் நல்லபடியாக எக்ஸாம் எழுது என்று வாழ்த்து சொல்லிவிட்டு வெளியே வந்து விடுகிறார்.

இனியவையும் எழிலையும் பார்த்த செல்வியின் வீட்டுக்காரர் பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார். அப்பொழுது ஆகாஷ் அவங்க அப்பாவை தடுத்து நிறுத்தி எழிலையும் இனியாவையும் போக வைத்து விட்டார். பிறகு இவர்கள் இரண்டு பேரும் பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு போய் ஆகாஷ் வீட்டிற்கு சென்று பார்த்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு செல்வியும் எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார்.

பிறகு பாக்கியா, இனியா செய்தது தவறு இல்லை என்று சொல்லி ரெஸ்டாரண்டிலே வைத்து விடுகிறார். ஆனால் இந்த பக்கம் ஈஸ்வரி மற்றும் கோபி வீட்டில் இருக்கும் பொழுது செல்வின் வீட்டுக்காரர் வந்து இனிய பார்த்துட்டு போனதை பிரச்சினையாக பேசி அவமானப்படுத்துகிறார். இதனால் கோபத்தில் ஈஸ்வரி மற்றும் கோபி இருக்கிறார்கள்.

அடுத்ததாக பாக்யாவுடன் சேர்ந்து எழில் இனிய வீட்டிற்கு வருகிறார்கள். அப்பொழுது கோபி, இனியாவை கூப்பிட்டு எங்கே போயிட்டு வருகிறாய் என்று கேட்கிறார். அதற்கு இனியா ரெஸ்டாரண்டுக்கு போனேன் என்று சொல்கிறார். ரெஸ்டாரண்ட் போவதற்கு முன் எங்கே போனாய் என்று கேட்கிறார். ஆனால் அதற்கு இனியா இதெல்லாம் நீங்க ஏன் கேட்கணும், உங்களுக்கு அவசியமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப ரியாக்ஷன் கொடுக்கிறார்.

அதாவது தற்போது கோபி மற்றும் ஈஸ்வரி நிலமை எப்படி இருக்கிறது என்றால் நீங்கள் இரண்டு பேரும் எங்களுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள். எந்த முடிவாக இருந்தாலும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் ஒதுங்கியே இருங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப தான் இருக்கிறது. அதிலும் இந்த இனியா இப்பொழுது எனக்கு மெச்சூரிட்டி இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற தெனாவட்டில் கோபியை உதாசீனப்படுத்தி வருகிறார்.

பாவம் இப்படிப்பட்ட இனியாவிற்காகத்தான் கோபி, ராதிகாவையே வேண்டாம் என்று பாக்யா வீட்டில் தஞ்சம் அடைந்தார். ஆனாலும் கோபி ஒண்ணும் அவ்வளவு உத்தமர் இல்லை, இருந்தாலும் ராதிகாவை தவிர மற்றவர்கள் எல்லாரும் சுயநலவாதிகளாக தான் இருக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி பாக்கியாவும் ஓவர் தெனாவட்டில் பிள்ளைகளை தன் பக்கம் வைத்துக் கொண்டு கோபி மற்றும் ஈஸ்வரியை டம்மி ஆக்கிவிட்டார்.

Advertisement Amazon Prime Banner