வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பாக்யாவின் கேன்டியனுக்கு புதிதாக வந்த பிரச்சனை.. ரணகளத்திலும் குதூகலமாக ஆட்டம் போடும் கோபி அங்கிள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி எல்லா தில்லு முல்லு வேலைகளையும் செய்துவிட்டு தற்போது சொகுசு வாழ்க்கைக்காக அம்மா சென்டிமென்ட் வைத்து பாக்யாவிடம் அண்டிப் பிழைக்கிறார். இதுல பாக்யா வீட்டில இருந்துகிட்டே உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணும் அளவிற்கு பாக்யாவை தோற்கடிப்பதற்கு சகுனி வேலையும் பார்த்து வருகிறார்.

இதில் கோபி கூட சேர்ந்துகிட்டு பாக்யாவின் மாமியாரும் கொஞ்சம் ஓவராக டார்ச்சர் கொடுக்கிறார். அதாவது பிசினஸில் லாஸ் ஆனதால் குடும்பத்தை நிர்வாக பண்ண தெம்பு இல்லாமல் இருக்கிறார் கோபி. இப்படி இருக்கும் பொழுது பாக்கியா எப்படா தோல்வியை சந்திப்பார், என்று கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் பொருட்காட்சி கவர்மெண்ட் ஆர்டர் ஓகே ஆனதால் பாக்கியா முதல் நாளில் வெற்றி கரமாக சமையல் ஆர்டரை செய்து முடித்து விட்டார். இதே மாதிரி அடுத்த நாளும் செய்துவிடலாம் என்று பொருட்காட்சிக்கு வரும் பாக்யாவிற்கு அதிர்ச்சியாக ஒரு விஷயம் நடந்து இருக்கிறது. அதாவது தரம் அற்ற பொருட்களையும், கெட்டுப் போனப் பொருட்களையும் பொருட்காட்சியில் வைத்ததால் கேண்டினுக்கு சீல் வைத்து விடுகிறார்கள்.

Also read: நந்தினியை அண்டி பிழைக்க போகும் கதிர்.. குணசேகரனின் அல்லகையை காலி பண்ணிய எஸ்கேஆர்

இதை கேட்டதும் பாக்யா வழக்கம்போல் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்கிறார். ஆனால் எதுவுமே பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு விடம் எடுபடாமல் போய்விட்டது. அதனால் இந்த செய்தி அனைத்து பக்கமும் பரவிடுகிறது. இதை தெரிந்து கொண்ட பாக்யாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் ரொம்பவே ஷாக் ஆகி விட்டார்கள்.

ஆனால் கோபி மட்டும் மனதிற்குள் இதெல்லாம் பாக்யாவிற்கு தேவை தான். இதுக்கு மேலேயும் அனுபவிக்க வேண்டும் என்று வஞ்சகமாக நினைக்கிறார். ஏற்கனவே இவர் கடன் மேல கடன் பட்டு வாழ முடியாமல் பாக்கியவிடம் அண்டி பிழைக்கிறார். இதற்கிடையில் வங்கியில் இருந்து கடனை அடைக்க சொல்லி கோபியை குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

இப்படி ரணகளத்தில் இருக்கும் பொழுது கூட பாக்யாவின் நிலைமையை பார்த்து குதூகலம் அடைகிறார் கோபி. இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி மேற்கொண்டு என்ன பிரச்சனை என்பதை தீர விசாரிப்பதற்காக ஆபீஸ்க்கு போய் கேள்வி கேட்கிறார். ஆனால் இதற்குப் பின்னணியில் இருந்து சூழ்ச்சி செய்தது கேண்டீன் ஆர்டர் கிடைக்காமல் போன அந்த நபரால் தான் இவ்வளவு பிரச்சனையும் ஆரம்பமாகியிருக்கிறது. அந்த வகையில் இதையெல்லாம் சரி செய்து தொடர்ந்து வெற்றி பெறுவார் பாக்கியலட்சுமி.

Also read: டோட்டலா டேமேஜ் ஆன எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்.. சன் டிவி குடும்பத்துக்குள்ளேயே நடக்கும் வெறித்தனமான போட்டி

Trending News