வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

மத்தளம் போல அடிவாங்கும் விடாமுயற்சி.. தயாரிப்பாளரை காப்பாற்றிய Netflix

விடாமுயற்சி என்று எந்த நேரம் பெயர் வைத்தார்களோ, அன்று முதல் ஜவ்வாக இழுத்து, கடந்த ஒரு வருடத்துக்கு மேல் அஜித் படம் வெளியாகாமல் இருந்தது. இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. இப்படி இருக்க, விடாமுயற்சி படத்துக்கு பிறகு ஆரம்பித்த குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பே முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால் இன்னும், விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்தபாடில்லை.

இதற்க்கு நடுவில் தயாரிப்பாளருக்கு குடைச்சல் கொடுத்துள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. அவர் இன்னும் 21 நாட்களுக்கு கால்ஷீட் அஜித்திடம் கேட்டுள்ளார். ஆனால் அஜித் குறைந்தபட்சம் 6 நாள் அதிகபட்சம் 10 நாள். அதற்குள் படப்பிடிப்பை முடித்துவிடுங்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

மத்தளம் போல அடிவாங்கும் விடாமுயற்சி..

சூழ்நிலை இப்படி இருக்க விடாமுயற்சி-க்கு அடுத்த ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் படத்தை பொங்கலுக்குள் முடிக்கவே செய்திருக்கிறார்கள். இல்லை என்றால் மகிழ்திருமேனி, இன்னும் 6 மாதத்துக்கு இழுத்து விட்டிருப்பார்.

பொங்கலுக்கு ஒப்பந்தம் நிறைவடைகிறது. அதற்குள் படத்தை முடித்து கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள். இல்லை என்றால் உங்கள் படத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அட்வான்ஸ் அமௌண்ட்டை திரும்ப தந்துவிடுங்கள் என்று netflix திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதை கேட்டு ஆடி போன லைகா மகிழ்திருமேனி-க்கு போன் போட்டு ஒரு காட்டு காட்டியுள்ளது. அதனால் தான் தற்போது அவர் வேகமெடுத்துள்ளார். ஏற்கனவே லைகா-வுக்கு தொடர் தோல்வி, இதில் netiflix காலை வாரி விட்டால், கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டியது தான். அதனால் தான் தற்போது படத்தை வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் நடிகர் அஜித், இதை எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.. அவரது விட்டேத்தியான பதில், தயரிப்பு நிறுவன குடைச்சல் என்று விடாமுயற்சி படம் மற்றும் அதன் இயக்குனர் மத்தளம் போல அடி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

Trending News