
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஆகாஷை பார்த்து பேச மாட்டேன் என்று பாக்யாவிடம் இனியா சத்தியம் செய்து இருக்கிறார். ஆனாலும் ஆகாஷ் எக்ஸாம் எழுத போகிறார் என்ற விஷயத்தை தெரிந்து கொண்ட இனியா, ஆகாஷுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தார். அதனால் எழிலிடம் ஃபோன் வாங்கி பேசலாம் என்று இனியா ஃபோன் கேட்டார்.
இந்த எழில் என்ன தான் நல்லவராக இருந்தாலும் இனியா கேட்ட போனை கொடுத்து இருந்து பேச வைத்திருந்தாலே போதும். அதை விட்டுவிட்டு பாக்கிய மாதிரி ஓவராக இனியாவை நேரடியாக ஆகாஷ் வீட்டிற்கு கூட்டிட்டு போயி வாழ்த்துக்களை சொல்ல வைத்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார். தேவையில்லாத விஷயம் தான் அதனால் தான் செல்வின் வீட்டுக்காரர் இனியாவை பற்றி தவறாக கோபி மற்றும் ஈஸ்வரிடம் பேசி சண்டை போட்டு போயிருக்கிறார்.
இதனால் கோபத்தில் இருந்த கோபி மற்றும் ஈஸ்வரி வீட்டுக்கு வந்த இனியாவிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு இனியா செய்தது எந்த தவறும் இல்லை என்ற அர்த்தத்தில் பாக்கியம் மற்றும் எழில், கோபி இடம் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதை பார்த்த ஈஸ்வரி இதற்கு மேலும் நாம் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொல்லி கோபியை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார்.
இவர்கள் போகும்போது எந்த பிள்ளையும் தடுக்கவில்லை, ரொம்ப சந்தோசம் போங்க என்ற நினைப்பில் தான் எல்லோரும் ரியாக்ஷன் கொடுத்தார்கள். அடுத்ததாக இனியாவிற்கு பத்திரிக்கையில் வேலை கிடைத்துவிட்டது. அதை கோபி மற்றும் ஈஸ்வரிடம் சொல்லிவிட்டு போகிறார். ஆனாலும் எவ்வளவு பேரு இருந்தாலும் கடைசியில் தனிமை தான் நிரந்தரம் என்பதற்கு ஏற்ப கோபி மற்றும் ஈஸ்வரி தனியாக ஒரு வீட்டில் இருக்கிறார்கள்.
இவர்களுடைய நிலைமையை பார்க்கும் பொழுது பாவமாகத்தான் இருக்கிறது. அடுத்ததாக பாக்யாவின் ஹோட்டலுக்கு புதுசாக பிரச்சனை வரப்போகிறது. அதாவது தற்போது வைத்திருக்கும் ஹோட்டலில் வேறு ஒருவர் ஏற்கனவே ஹோட்டல் வைப்பதற்கான உரிமையை வாங்கி இருப்பதாக ஹோட்டலுக்கு வந்து பாக்யாவிடம் பிரச்சனை பண்ணுகிறார்கள். இந்த பிரச்சனை வைத்து இன்னும் கொஞ்ச நாள் பாக்கியலட்சுமி கதை ஓடும்.