எலான் மஸ்க் என்றாலே புத்திசாலித்தனம், டாப் பணக்காரர், எதையும் வித்தியாசமாகவும், புத்திசாலித்தனமாகவும், விளையாட்டாகவும் யோசிப்பவர் என்றுதான் நம் நினைவுக்கு வரும். அப்படிப்பட்டவர் தான் எலான் மஸ்க். ஆனால் இவர் உலகின் டாப் பணக்காரர்களில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத புதிய வரலாற்றை படைத்திருக்கிறார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க். இவர், தொழில்துறையில் பல புதுமைகளை மேற்கொண்டு தன் கடின உழைப்பால் இன்று உலகின் டாப் பணக்காரர்கலின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பல்வேறு பிரசார வழிமுறைகளை சமூக வலைதளங்களிலும் நேரிலும் மக்களிடையே மேற்கொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் உயர்ந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு
அதேபோல், டிரம்பின் பிரச்சாரத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கி டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற உதவி செய்தார் எலான் மஸ்க். அதனால், டொனால்ட் டிரம்ப் அரசில் எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பை வழங்கியிருக்கிறார். இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு வெளியானபோது, ஒரே நாளில் மட்டும் ரூ.2.19 லட்சம் கோடி உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி, தேர்தலுக்குப் பின், எலான் மஸ்கின் மொத்த மதிப்பு என்பது ரூ.29 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக பிரபல இதழான போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த அளவுக்கு சொத்து மதிப்பை இதுவரை யாரும் வைத்திராத நிலையில், உலக வரலாற்றில் பெரும் பணக்காரர் என்ற பெருமையை எலான் மஸ்க் படைத்துள்ளார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் நெட்வொர்க் சந்தையில் எலான் மஸ்க் நுழைய அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரது நிறுவனம் நுழையும் பட்சத்தில் மேலும் அவரது சொத்து மதிப்புகள் உயரலாம் என தகவல் வெளியாகிறது.