ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

Dhanush: பிக்பாஸ் ப்ரதீப்ன்னா இனிக்குது, தனுசுன்னா கசக்குதா?. வன்மத்தை கக்கும் விஷமிகள்

Dhanush: சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி தான் பிரபலம் ஒருவர் இன்று பயங்கரமான வேலையை பார்த்து விட்டார். ஒரே பேட்டியில் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையும் கதி கலங்க வைத்து விட்டார்.

சமூக வலைத்தளத்தை பொருத்தவரைக்கும் தினமும் ஒரு செய்தி கவனத்தை பெறும். அதைப்பற்றி பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்வான கருத்துக்கள் பலரால் எழுப்பப்படும். ஆனால் இன்னைக்கு பேசப்படும் விஷயம் வெட்டுக்குத்து ஆய்டுமோ என்று பயப்படும் அளவுக்கு பெருசாகி விட்டது.

தமிழ் சினிமாவில் நடந்த ஒரு சில சம்பவங்கள் எப்பவுமே நமக்கு ஞாபகம் இருக்கும். அதில் ஒன்றுதான் சுச்சி லீக்ஸ். பாடகி சுசித்ரா பிரபலங்கள் சிலரின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து பகீர் கிளப்பி இருந்தார். அதில் நடிகர் தனுஷ் பற்றியும் நிறைய குற்றச்சாட்டுகளை எழுப்பி இருந்தார்.

அதன் பின்னர் சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என்று சொல்லி அந்த விஷயத்தை மூடி மறைத்து விட்டார்கள். அத்தோடு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். அவர் இன்று நடிகர் தனுஷ் பற்றி பேசி இருக்கும் சில விஷயங்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கிறது.

அதைத் தாண்டி தனுசுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்ற பெயரில் சுசித்ரா பற்றி அவதூறுவாக பேசும் கருத்துக்களை பார்க்கும் போதும் என்ன இது இந்த அளவுக்கு இறங்கி விட்டார்களே என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் சுசித்ரா பேசிய பழைய வீடியோ ஒன்றும் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

பிரதீப்புக்கு ஒரு நியாயம், தனுசுக்கு ஒரு நியாயமா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட போது ட்ரெண்டான வீடியோ அது. அதில் சுசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கமலஹாசனை பற்றி ரொம்பவும் தரை குறைவாக பேசி இருப்பார்.

அந்த சமயத்தில் பிரதீப் ஆண்டனிக்கு கமலஹாசன் ரெட்க்கார்டு கொடுத்திருந்ததால் அந்த வீடியோவில் சுசித்ரா பேசியதற்கு பயங்கரமாக சப்போர்ட் செய்தார்கள் ஒரு சில குரூப்புகள்.

ஆனா இப்போ தனுஷ் பற்றி பேசும்போது அவரை தரை குறைவாக பேசியதால் நடுநிலையான ரசிகர்கள் சிலர் அன்னைக்கு மட்டும் சுசித்ராவை தூக்கி வைத்து கொண்டாடுனீங்களே,` இப்போதான் அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிகிறதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Trending News