திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சந்திரமுகி 2 படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பி வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு மற்றும் பலர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினியின் திரை வாழ்க்கையில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமை சந்திரமுகிக்கு உண்டு. இந்நிலையில் இயக்குனர் பி வாசு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

ரஜினிக்கு எப்போதுமே தன்னுடைய படங்களில் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் அவரின் அனுமதியுடன் சந்திரமுகி 2வில் லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு போன்ற முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை லைக்கா தயாரிக்கிறது.

Also Read : ஊருக்கு மட்டும் தான் உபதேசம் போல.. நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் நிப்பாட்டிய ராகவா லாரன்ஸ்

மேலும் சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக தகவல் வெளியானது. மற்ற பின்னணி வேலைகள் முமரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் சந்திரமுகி 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வந்தது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது.

இந்நிலையில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் அரசர் உடையில் உள்ள புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகி ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இடம்பெறும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதில் சந்திரமுகியின் காதல் காட்சிகள் மற்றும் வேட்டையனை பழி வாங்குவதற்கான காரணம் ஆகியவை வெளிவர இருக்கிறது.

Also Read : ராகவா லாரன்ஸ் வலை வீசிய 4 நடிகைகள்.. வெளிப்படையாகவே டேமேஜ் செய்த ஹீரோயின்

இதனால் சந்திரமுகி 2 படத்தில் இன்னும் சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அப்போது உள்ள தொழில்நுட்பத்திலேயே கிராஃபிக்ஸ் காட்சிகள் அருமையாக எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மிக நுணுக்கமாக பல காட்சிகள் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.

chandramuki-2
chandramuki-2

Also Read : ரஜினி முன்னாடியே இந்த படம் ஓடாது எனக் கூறிய ராகவா லாரன்ஸ்.. கடுப்பாகி சூப்பர் ஸ்டார் எடுத்த முடிவு

Trending News