திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மகனின் குறும்புத்தனத்திற்கு அடிமையான நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் போட்டோ

Actress Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படங்களில் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்ததை அடித்து அங்கேயே பல வாய்ப்புகள் நயன்தாராவை தேடி வருகிறதாம். அதுமட்டுமின்றி தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக இருப்பவர்களுக்கு சில பிரச்சனை சந்திக்க கூடும்.

அதாவது சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் குடும்பத்திற்கான நேரத்தை செலவிடுவது மிகவும் குறைவுதான். ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு முன்பே தங்களுடைய விடுமுறை நாட்களை வெளிநாட்களில் கழித்து வருவார்கள். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Also Read : 2023-ல் நா தான் பெஸ்ட் என நிரூபித்து 8 நடிகைகள்.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சமத்து நடிகை

ஆனாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நயன்தாரா விடுமுறை நாட்களில் நாங்கள் நன்கு தூங்குவோம், சாப்பிடுவோம் மீண்டும் தூங்குவோம் அதுதான் எங்களது வாடிக்கையாக இருக்கும். ஏனென்றால் எங்களுக்கு ரெஸ்டே கிடைக்காது அந்த நாட்களை மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நயன்தாரா கூறியிருந்தார்.

ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலம் மூன்றே மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். பொதுவாக பண்டிகை நாட்களில் தவறாமல் தங்களது குழந்தைகளுடன் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர்.

Also Read : படமே இல்லாமல் தலைகணத்தோடு ஆடும் நயன்தாரா.. ஓவர் அட்ராசிட்டியால் பின் வாங்கும் தயாரிப்பாளர்கள்

இந்த சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நயன்தாரா தனது மகன்களுடன் நேரத்தை செலவிட்டு இருக்கிறார். அப்போது தனது மகனை கையில் வைத்துக்கொண்டு நயன் கொஞ்சு உள்ளார். அப்போது குறும்புத்தனமான அவருடைய மகன் செயினை நயனின் மூக்கின் மீது வைத்து விளையாடி இருக்கிறார்.

அதை அழகாக புகைப்படம் எடுத்து விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ் மற்றும் கமேண்ட்டுகள் குவிந்து வருகிறது. நயன்தாரா என்னதான் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் ஒரு அம்மாவாக தன்னுடைய குழந்தைகளுக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மகனின் குறும்புத்தனத்திற்கு அடிமையான நயன்தாரா

Nayanthara
Nayanthara

Also Read : உங்கள மலைபோல் நம்பினேன் இப்படி கால வாரி விட்டுட்டீங்க.. விக்ரமால் பரிதவிக்கும் அடுத்த நயன்தாரா

Trending News