புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சிகிச்சைக்குப் பின் பிரமோஷனில் கலந்து கொண்ட சமந்தா.. பல பலனு பப்பாளி பழம் போல் மாறிய புகைப்படம்

நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் உடல் குன்றிய நிலையிலும் போட்டுக் கொண்டே யசோதா படத்தில் நடித்து 50 கோடிக்கு அதிகமான வசூல் வேட்டை ஆடினார். இவர் நடிப்பின் மீது இருக்கும் அபரிவிதமான ஆசையினால், நடிப்பை விட முடியாமலும் சிகிச்சை மேற்கொள்ள முடியாமலும் தவித்து வந்தார்.

அதிலும் சமீபத்தில் சமந்தா எழுந்து கூட நடக்க முடியாத படுத்த படுக்கையாக உள்ளார் என்ற செய்தியை அறிந்ததும் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். ஆனால் இப்போது மீண்டும் தான் பழையபடி வருவேன் என்கின்ற நம்பிக்கை விதையை தூவும் நோக்கத்தில் புத்தாண்டில் ரெசல்யூஷன் உடன் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

samantha-1-cinemapettai
samantha-1-cinemapettai

Also Read: 2022 ஆம் வருடத்தின் 5 சிறந்த நடிகைகள்.. தொட்டதெல்லாம் துலங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

இப்போது சமந்தா விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் அவருடைய சகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதில் வெள்ளை நிற புடவையில் பெரிய கண்ணாடியுடன் எலும்பும் தோலுமாக தெரிகிறார். அதே சமயத்தில் தற்போது தான் சகுந்தலம் படத்தின் டப்பிங் வேலையை சமந்தா முடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் சாகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதன் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமந்தா சிகிச்சைக்கு பின் சகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனல் கலந்து கொண்ட எலும்பும் தோலுமாக மாறிய சமீபத்திய சமந்தாவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

samantha-2-cinemapettai.jpg
samantha-2-cinemapettai.jpg

Also Read: மேக்கப்மேனுக்கு வாரி இறைக்கும் நயன்தாரா, சமந்தா.. ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவா?

Trending News