திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

600 படிக்கட்டில் கற்பூரம் ஏற்றிய சமந்தாவின் புகைப்படம்.. மனம் உருகி செய்த வேண்டுதல்

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா தமிழில் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியவர்.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சமந்தாவின் உடல்நலம் ஓரளவு குணமடைந்திருக்கிறது. மேலும் கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்ட சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார்.

Also Read: சமந்தா போல ரகசியமான நோயால் பாதிக்கப்பட்ட 5 நடிகைகள்.. விஜய் பட நடிகைக்கு ஏற்பட்ட கொடுமை

அங்கு 600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி, நடந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். அப்போது பேட்டியளித்த சமந்தா, உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்தேன். தற்போது கடவுளின் அருள், மருத்துவர்களின் ஆலோசனையால் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேடி வருகிறது.

இதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே முருகனுக்கான வேண்டுதலை நிறைவேற்றி, வழிபாடு செய்ய வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பழனி முருகன் கோயிலில் சமந்தா உருகி வேண்டுதல் செய்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: இவர் கூட ஜோடி போட்டு நடிச்சா , ஸ்ட்ரெயிட்டா கல்யாணம்தான்.. சமந்தா வரிசையில் சிக்கிய 2 அழகிகள்

சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஐந்து மொழிகளில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் சமந்தா நடித்த வருகிறார். இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அதிலிருந்து மீண்டு வருவதற்காக கடவுள் நம்பிக்கையுடன், உடற்பயிற்சி மருத்துவ ஆலோசனை போன்றவற்றின் மூலம் சமந்தா செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

 பழனி முருகன் கோயிலில் மனம் உருகி வேண்டுதலை நிறைவேற்றும் சமந்தா

samantha-cinemapettai
samantha-cinemapettai

Also Read: பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த சமந்தா.. வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம்

Trending News