செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லியோ உடன் மோதிப் பார்க்கத் தயாராகும் சஞ்சய் தத்.. இணையத்தை அலறவிடும் ஜிம் புகைப்படம்

லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இந்தப் பட அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு அதிக குளிர் உள்ளதால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறதாம். மேலும் காஷ்மீரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Also Read : துணிவு படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. ஏகே 62 மூலம் லியோவுக்கு வரும் அடுத்த சிக்கல்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விஜய்க்கு வில்லனாக இந்த படத்தில் மிரட்ட இருக்கிறார். மேலும் லோகேஷ் சொன்ன ஒன் லைன் ஸ்டோரி தனக்கு பிடித்து விட்டதாகவும் அதனால் தான் லியோ படத்தில் நடிக்க சம்மதித்ததாக கூறியிருந்தார். இப்படத்திற்கு முன்னதாக கே ஜி எஃப் படத்தில் ஆதீரா என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் மிரட்டி இருந்தார்.

மேலும் விஜய் உடன் இவர் முதல் முதலாக மோத உள்ளதால் தரமான சண்டை காட்சிகள் லியோ படத்தில் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் இன்று காலை லியோ படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன் ஜிம் ஒர்க் அவுட் செய்து தயாராகும் புகைப்படத்தை சஞ்சய் தத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read : 3 மடங்கு செலவை இழுத்துவிட்ட லியோ லோகேஷ்.. மொத்த லாபமும் இதுலே போயிடுமோ என பயத்தில் தயாரிப்பாளர்

அதில் எப்போதுமே உங்களது மனதின் ஆற்றலை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய்க்கு இணையாக சஞ்சய் தத்தின் கதாபாத்திரமும் லியோ படத்தில் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தை பற்றிய அப்டேட் மற்றும் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி வருகிறது.

ஜிம் ஒர்க் அவுட் செய்யும் சஞ்சய்தத்

sanjay-dutt

Also Read : காஷ்மீர் குளிரால் நொந்து போன லியோ டீம்.. உறைய வைக்கும் பனியிலும் விஜய் செய்யும் அலப்பறைகள்

Trending News