திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அடுத்த படத்திற்கு மாஸாக தயாராகிய ஆர்யா.. சிக்ஸ் பேக் உடன் வெளியிட்ட புகைப்படம்

Actor Arya : ஆர்யா கடைசியாக கொடுத்த ஹிட் படம் என்றால் அது சார்பட்டா பரம்பரை தான். இந்த படத்திற்குப் பிறகு அவருடைய படங்கள் வெளியானாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் பலரையும் ஆச்சரிய பட வைத்திருக்கிறது. அதாவது உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடம்புடன் கட்டுமான்ஸாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

அதாவது மார்ச் மாதம் மனு ஆனந்த் ஆர்யாவிடம் ஒரு கதையை கூறி ஒப்பந்தம் வாங்கி இருக்கிறார். அதற்கு அடுத்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் டயட் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்துள்ளார் ஆர்யா.

சிக்ஸ் பேக் உடன் ஆர்யா

உனக்கு ஏதாவது சரியாக ஒரு வருடத்திற்குள் கடந்த மார்ச் மாதம் எடுத்த புகைப்படத்துடன், இந்த வருட மார்ச் மாதம் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு ஐ அம் பேக் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மார்ச் 2023-ல் ஆர்யா

arya-cinemapettai
arya-cinemapettai

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் அனிகா, மஞ்சு வாரியர், சரத்குமார் ஆகிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கு மிஸ்டர் எக்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ளது.

மார்ச் 2023-ல் ஆர்யா

arya-mr-x
arya-mr-x

மேலும் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆர்யாவின் இந்த கடின உழைப்புக்கு மிஸ்டர் எக்ஸ் படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

arya-tweet
arya-tweet

Trending News