வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

24 மணி நேரமும் ஜிம் டிரெய்னர் தான் கெதி என கிடக்கும் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஸ்லிம்மா மாறியும் வாய்ப்பு இல்ல ராஜா

Actress Losliya: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா இப்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். அவருடைய நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா படங்கள் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் பிக் பாஸில் வந்த புதிதில் குஷ்பூ போல் கொழுக்கு முழுக்கு என இருந்த லாஸ்லியா இப்போது ஜிம் ஒர்க் அவுட் மூலம் நாளுக்கு நாள் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து போய் காணப்படுகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா இப்போது சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

Also Read : வேற லெவலில் உருவாகும் தளபதி 68 ப்ரோமோஷன் வீடியோ.. பிக் பாஸ் பிரபலத்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வெங்கட் பிரபு

அதாவது ஜிம்மில் தனது டிரெயினருடன் விதவிதமாக போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி தான் இப்போது பிட்டாக இருக்கும்படி உணர்வதாக லாஸ்லியா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது லாஸ்லியா, கவின் காதல் சர்ச்சை வெடித்தது.

அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை அவரை கடுமையாக பேசுகிறார். அதன் பிறகு கவினுடன் பழகுவதை லாஸ்லியா நிறுத்திக் கொண்டார். மேலும் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் உங்களுக்கு பிரேக் அப் ஆகிவிட்டதாக இருவருமே ஒத்துக்கொண்டனர்.

Also Read : அதிரடியாக வெளியான பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.. கவர்ச்சி நடிகையை களம் இறக்க தயாராகும் விஜய் டிவி

தமிழில் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்போது அவர் படங்களில் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் லாஸ்லியாவோ பட வாய்ப்பு இல்லாததால் உடல் எடையை குறைத்து இருக்கிறார். ஆனாலும் படவாய்ப்பு வந்த பாடு இல்லை.

24 மணி நேரமும் ஜிம் தான் கெதி என கிடக்கும் லாஸ்லியா

losliya
losliya

இப்போது ஜிம் ட்ரெய்னருடன் இவர் போட்டிருக்கும் புகைப்படத்தால் சர்ச்சை வெடித்திருக்கிறது. அதாவது இவருடன் லாஸ்லியா பழகி வருவதாக விமர்சனங்கள் எழுகிறது. ஆனால் இதுகுறித்து எதுவுமே பேசாமல் லாஸ்லியா மௌனம் சாதித்து வருவது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜிம் டிரெயினர் உடன் லாஸ்லியா

losliya
losliya

Also Read : பிக் பாஸில் வந்த பிறகு சீரியல் வாய்ப்பும் பறிபோனதா? உண்மையை உடைத்த ரட்சிதா

Trending News