செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித் மச்சானை வைத்து பூதாகரமாக வெடித்த பகாசூரன் சர்ச்சை.. அடையாளம் தெரியாமல் ரிச்சர்ட் வெளியிட்ட புகைப்படம்

மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பகாசூரன் திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சர்ச்சையை சந்தித்து வருகிறது. அந்த வகையில் படத்தின் கதை குறித்த விவகாரம் பெரும் பிரச்சனையை கிளப்பிய நிலையில் இயக்குனர் அதற்கான விளக்கத்தை சில ஆதாரங்களோடு கொடுத்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதாவது மோகன் ஜி இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் தான் ரிச்சர்ட் ரிஷி. அஜித்தின் மச்சானான இவர் இன்னும் திரையுலகில் தனக்கான ஒரு அங்கீகாரத்துக்காக போராடி வருகிறார்.

Also read: ஒரிஜினல் கேரக்டரில் நடித்த லயா.. பகாசூரனில் இருக்கும் சீக்ரெட்

அந்த வகையில் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் அவருடைய நடிப்பு அசத்தலாக இருக்கும். அதனால் பகாசூரன் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற ரீதியில் ரசிகர்கள் பேசி வந்தனர். அது மட்டுமல்லாமல் செல்வராகவனை விட ரிச்சர்ட் தான் நடிப்பில் சிறந்தவர் என்றும் கூறினார்கள்.

இது ஒரு புறம் இருந்தாலும் ரிச்சர்ட் இந்த படத்தில் நடிக்காததற்கு முக்கிய காரணம் ஒன்றும் மீடியாக்களில் உலா வந்தது. அதாவது இந்த படத்தில் சிவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருந்தது. அதுவும் செல்வராகவனின் கதாபாத்திரமும் சிவன் கோவிலில் சேவை செய்பவராகத்தான் இருந்தது. இந்த காரணத்தினால் தான் ரிச்சர்ட் இப்படத்தில் நடிக்கவில்லை என்ற ஒரு சர்ச்சை பூதாகரமாக வெடித்து வருகிறது.

Also read: ரெண்டு நிமிடம் கட் செய்யுங்கள்.. வீடியோ ஆதாரத்தைக் காட்டி மிரட்டி விட்ட பகாசூரன் இயக்குனர்

கடந்த சில நாட்களாகவே இப்படி ஒரு விஷயம் பரவி வரும் நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மோகன் ஜி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இது போன்ற தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீர்கள். என்னுடைய அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி சார்தான். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

சிவனடியார் போன்ற தோற்றத்தில் இருக்கும் ரிச்சர்ட்

richard-rishi
richard-rishi

மேலும் ரிச்சர்ட் சிவனடியார் போன்ற தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அது காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட படம் என்றும் அவர் எல்லா கடவுள்களையும் வணங்குபவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரிச்சர்ட் குறித்து வெளிவந்த அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also read: செல்வராகவனை வைத்து சூரசம்காரம் செய்த பகாசூரன் பட விமர்சனம்.. அழுத்தமான விஷயத்தை சொல்லிய மோகன் ஜி

Trending News