வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜயுடன் செல்பி புகைப்படம் எடுத்த ராஷ்மிகா.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பான வம்சி

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் பக்கா சென்டிமென்ட் படமான வாரிசு படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராஷ்மிகா விஜயுடன் எடுத்திருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

Also Read: அஜித் விஷயத்தில் மூக்க நுழைக்காதிங்க.. விஜய் போட்ட கண்டிஷன்

ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கூறியிருந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் ராஷ்மிகா விஜயுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இயக்குனர் வம்சியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

இனிமேல் ராஷ்மிகாவை வாரிசு படத்திற்கான படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது தொலைபேசியை கொண்டு வரக்கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம். இருப்பினும் ராஷ்மிகா மற்றும் விஜய் இருவரும் இணைந்து எடுத்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

விஜய்யுடன் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ராஷ்மிகா

varisu-shooting-spot-vijay-cinemapettai
varisu-shooting-spot-vijay-cinemapettai

Also Read: 9 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. விஜய்க்காக தயாராகும் 100வது படத்தின் கதை

இதில் வாரிசு படத்தில் விஜய் எப்படி இருக்கிறார் என ஏற்கனவே வெளியான  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மூலம் ரசிகர்கள் தெரிந்து கொண்டாலும், படம் முழுவதும் எப்படி இருக்கப் போகிறார் என ஏங்கிய ரசிகர்களுக்கு இந்த புகைப்படத்தை பார்த்ததும் இப்படி தான் படத்திலும் இருப்பார் என நினைத்து செம குஷியில் உள்ளனர்.

இந்த படத்திற்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் உடன் தனது 67-வது படத்தில் இணைய போகிறார். பக்கா சென்டிமென்ட் படமாக உருவாகும் வாரிசு படத்திற்கு பிறகு, தளபதி விஜய் லோகேஷ் உடன் அதிரடி ஆக்ஷன் படத்தில் கலக்கயிருக்கிறார்.

Also Read: சூட்டிங்கிற்கு முன்பே பல கோடிகளை அள்ளிய தளபதி 67.. இது தான் வியாபார தந்திரமா!!

Trending News